விஜயகாந்த் சமாதியில் வைத்து ஜி.பி. முத்து செய்த காரியம்! பூரிக்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஜி.பி.முத்து சென்னையில் மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. நெல்லை மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் மரத்தொழில் செய்து வந்தார். அப்படியே முழு நேரமும் டிக்டாக் வீடியோ செய்து வந்தார். இதனால் பிசினஸை கவனிக்க முடியாமல் மரத்தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறி அவருக்கு கடிதங்களையும் பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்தனர். டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதும் பேஸ்புக்கில் லைவ்வில் வந்தார். இதையடுத்து அவர் யூடியூப் சேனலை தொடங்கினார்.
அதில் அவரை பலர் கலாய்த்து அனுப்பும் கடிதங்களையும் படித்துக் காட்டுவார். அவருக்கே உண்டான சில கெட்ட வார்த்தைகளில் திட்டுவதை ரசிகர்கள் ரசித்து வந்தனர். இவர் சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த புகழின் மூலம் ஓ மை கோஸ்ட், பம்பர், துணிவு ஆகிய படங்களில் சிறுவேடங்களில் நடித்தார் ஜி.பி.முத்து. இது தவிர பல்வேறு இடங்களில் கடை திறப்பு விழாக்களுக்கும் சென்று வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மறைந்தார். அவருடைய உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அது போல் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, சூர்யா, விஷால், ஆர்யா, சூரி உள்ளிட்டோரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் ஜி.பி. முத்துவும் விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் விஜயகாந்தை போல் நானும் உதவிகளை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இருந்தாலும் என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன், இனியும் உதவுவேன் என தெரிவித்துள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications