Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கக்கடலில் விழுந்த ‛ககன்யான்’ கலன்.. மீட்டு சென்னை துறைமுகம் கொண்டு வரும் கடற்படை! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதன் சோதனை கலன் இன்று மாலைக்குள் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலனை அனுப்பி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையில் இந்தியாவுக்கு இது ஒரு முக்கியமான மைல்கல். இருப்பினும் இந்தியா இன்னமும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. இப்படி இருக்கையில்தான் வரும் 2025ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையம் பிரிய போவதாக அறிவிப்பு வெளியாகியது. அப்படியெனில், ரஷ்யா இந்த விண்வெளி மையத்திலிருந்து பிரிந்து புதிய விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறது. இது இந்தியாவுக்கு அற்புதமான வாய்ப்பு. விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவும்-ரஷ்யாவும் நெருங்கிய நண்பர்கள்.

Gaganyaan Crew Module arrives at Chennai port

இந்திய விண்வெளி துறையில் வளர ரஷ்யா ஏராளமான பங்களிப்புகளை செய்திருக்கிறது. எனவே புதியதாக அமையும் விண்வெளி மையத்தில் இந்தியாவுக்கு இடம் கிடைக்க சான்ஸ் இருக்கிறது. ஆனால் இதற்கு சில அடிப்படை விஷயங்களில் இந்தியா தேர்த்தி பெற்றிருக்க வேண்டும். அதாவது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா விண்வெளியில் பறந்திருக்கிறார். ஆனால் இஸ்ரோ சார்பில் அல்ல. சோவியத் ரஷ்யாதான் அவரை பறக்க வைத்தது. இதெல்லாம் நடந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போதைய நிலையில் இந்தியா ஏராளமான விஷயங்களை விண்வெளியில் சாதித்திருக்கிறது. எனவே தானாக, அதாவது இஸ்ரோ மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அப்போதுதான் ரஷ்யாவிடம் நமது கோரிக்கையை வைக்க முடியும்.

எனவே இதனை சாதிக்க இந்தியா ககன்யான் எனும் திட்டத்தை போட்டது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் முதல்கட்ட சோதனைதான் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதாவது மனிதர்களை ஏற்றி செல்லும் மாதிரி கலன் (Crew Module) ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால், இந்த கலனை எப்படி பத்திரமாக மீட்பது என்பதுதான் சோதனை.

மாதிரி கலனை ஏந்திக்கொண்டு TV-D1 ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும். அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும். இதில் மொத்தம் 10 பாராசூட்கள் இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான பாராசூட் விரியும். இப்படியாக வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும். அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனையாகும்.

இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால் சாதகமான வானிலை இல்லாததால் 8 மணிக்கு ஏவப்பட வேண்டிய ராக்கெட் 8.30க்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஏவப்படாமல், 8.45லிருந்து 9 மணிக்குள் ஏவப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி 5 விநாடிகளில் ராக்கெட் ஏவுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் 30 நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஏவப்பட்ட இந்த ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாக மாதிரி கலன் பிரிந்து கடலை நோக்கி தரையிறங்கியது. இப்படி தரையிறங்கிய மாதிரி கலனை மீட்க கடற்படையினர் தயார் நிலையில் இருந்திருக்கின்றனர். மட்டுமல்லாது சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்படியாக மீட்கப்படும் கலன் இன்று மாலை சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இஸ்ரோவின் ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு இந்த கலனை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நடத்தியதை போல 20க்கும் அதிகமான பெரிய சோதனைகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+