அதிராம்பட்டினம் அருகே கஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது.. திண்டுக்கல் அருகே வலுவிழந்து மையம்!
தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் தற்போது அதிராம்பட்டினம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயல் தற்போது அதிராம்பட்டினம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது.
கஜா புயல் தமிழகத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் நினைத்ததை விட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே முதற்கட்டமாக கரையை கடந்தது.

இன்னும் இல்லை
இந்த புயல் கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சரியாக அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 3 மணி வரை இந்த புயல் கரையை கடந்து இருக்கிறது. வேதாரண்யம் அருகே புயல் கரையை கடந்தது.

ஆனால் என்ன
ஆனால் இந்த புயல் இன்னும் முழுதாக தமிழகத்தை விட்டு செல்லாமல் இருந்தது. இதன் வால்பகுதி இன்னும் தமிழகத்தை தாண்டாமல் மெதுவாக சென்றது. இந்த வால்பகுதி கடக்கும் வரை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மோசமாக காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது..

ஒரு மணி நேரம்
கஜா புயல் முழுமையாக கரையை கடக்க 1 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது. காலை 8மணியில் இருந்து 9.15 மணி வரை இந்த புயல் மெதுவாக கடந்து சென்றது. ஆனால் இந்த நேரத்தில் காற்றின் வேகமும் மிகவும் அதிகமாக இருந்தது.
காற்றின் வேகம்
இதனால் 110 கிமீ வேகத்தில் காற்று வீசியது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, இராமேஸ்வரம், காரைக்கால் மாவட்டங்களில் மோசமாக காற்று வீசி வருகிறது. காற்றை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கஜா புயல் தற்போது அதிராம்பட்டினம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது. 110 கிமீ வேகத்தில் கரையை கடந்த கஜா புயல் வலிமை இழந்தது.

திண்டுக்கல் அருகே மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த இந்த கஜா புயல் திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. முக்கியமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications