கஜா புயல்.. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அனிமேஷன் வீடியோ.. வைரல்!
கஜா புயல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.
கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. 25 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில் தயார் நிலையில் இருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.
[இது சென்னைக்கானது அல்ல.. கஜாவால் கிடைக்கும் மழை போனஸ்தான்.. தமிழ்நாடு வெதர்மேன் ]
|
மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்
இந்த வீடியோவில் முதலில் எங்கு புயல் ஏற்படும், எப்போது புயல் வெள்ளம் ஏற்படும் என்று வானிலையில் அறிவிப்பது போல செய்திகளை தெரிவிக்கிறார்கள். அதன்பின் பேரிடரின் போது எப்படி தப்பிக்க வேண்டும், என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்று குட்டி சிறுமி அறிவுரை சொல்வது போல வடிவமைத்து இருக்கிறார்கள்.
|
நல்ல அறிவுரை வழங்கினார்கள்
இதில் அரசு ஆவணங்களை எப்படி காக்க வேண்டும், மக்கள் எங்கு தங்க வேண்டும், அரசு அறிவுரைகளை பின்பற்றுவது என்று நிறைய முக்கிய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். மேலும் வதந்திகளை நம்ப கூடாது என்றும் அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

சூப்பர் பாஸ்
இந்த வீடியோவில் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அருமையான அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பக்கம் இருக்கும் கடல் பகுதியில் இந்த பேரிடர் நடப்பதாக வடிவமைத்துள்ளனர். இந்த அனிமேஷன் மிகவும் நன்றாகவும், கவரும் வகையிலும் உள்ளது.

வரவேற்பு பெற்றுள்ளது
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையின் யூ டியூப் சேனலுக்கு குறைவான பார்வையாளர்களே இருந்தாலும், இந்த குறிப்பிட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது. இந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications