சர்ச்சை இயக்குநர் கையில் சிக்கிய ‘காந்தி’.. ரஹ்மான் போட்ட ட்வீட்.. செம கூட்டணி
சென்னை: தனது பின்னணி இசையில் சர்வதேச தரத்தில் 'காந்தி' வெப்சீரிஸ் ஒன்று தயாராகி இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது எக்ஸ் தளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தியை உலகமே கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் சத்தமே இல்லாமல் அமைதியாக ஒரு அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருக்கிறார். இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கிவரும் காந்தி வெப் சீரிஸ்க்கு தான் இசையமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இணையத் தொடர் காந்தியின் 'இளமைக் காலத்தை' பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 'உண்மையுடன் காந்தி மேற்கொண்ட சோதனைகள்' என்று ரஹ்மான் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

ஹன்சல் மேத்தா இதற்கு முன்னதாக 'ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி' என்ற வெப் சீரிஸ் இயக்கி இருந்தார். இது இந்தியப் பங்குச் சந்தையை தலை சுற்ற வைக்கும் உயரத்திற்குக் கொண்டு சென்ற ஹர்ஷத் மேத்தாவின் கதையைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. அவர் எப்படி வீழ்ச்சி அடைந்தார் என்பதைப் பற்றி விவரிக்கும் இணையத் தொடராக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இதில் நடித்திருந்த பிரதிக் காந்தி தான் இப்போது ரஹ்மான் இசையமைக்கும் 'காந்தி' தொடரிலும் நடிக்க இருக்கிறார். இவரது மனைவி பாமினி ஓசாதான் காந்தியின் மனைவியான கஸ்தூரிபா தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு தொடரில் நாயகனாகக் கணவரும் அவருடைய நிஜமான மனைவியே படத்திலும் நடிப்பதால் ஒருவித எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் பரபரப்பான தொடரை இயக்கிய ஹன்சல் மேத்தா 'காந்தி'யை பற்றி எடுப்பதால் கட்டாயம் சர்ச்சைக்குப் பஞ்சம் இருக்காது என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாலிவுட்டில் ஏற்கெனவே ரோஜா, பாம்பே, தால், லகான், ஸ்லம்டாக் மில்லியனர் எனத் தொட்டவை எல்லாம் வெற்றி என பெயர் எடுத்த ரஹ்மான் இசையமைப்பதால் கூடுதல் கவனத்தை இத்தொடர் பெற்றுள்ளது. காந்தியின் 155வது பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்களுக்கு இந்த புதிய அறிவிப்பை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
பிரதிக் காந்தி, முன்னதாக மட்கான் எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் தயாரிக்க உள்ள இந்தத் தொடர் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய 'இந்தியா பிஃபோர் காந்தி', 'இந்தியா ஆஃப்டர் காந்தி' ஆகிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஆகவேதான் காந்தி தொடருக்கு இசையமைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தில் ரஹ்மான் எங்களுடன் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு கனவு நனவானதைப் போன்று உள்ளது என்றார் மேத்தா. "அவரது இசையானது கதை சொல்லும் தரத்தை மேலும் உயர்த்தும். தனித்துவமான திறனை அவரது இசை கொண்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொடருக்கு அவர் இசையமைக்க உள்ளார். காந்தி வாழ்க்கை என்பது உணர்ச்சி மற்றும் ஆன்மீக கூறுகளை உள்ளடக்கியது. அதை இசை வழியே கொண்டு வர ரஹ்மானை விட்டுவிட்டு வேறு யாரையும் நாங்கள் யோசிக்கக்கூட முடியவில்லை" என்று இயக்குநர்.
"காந்தி என்பது வெறும் தொடர் அல்ல; இது மனித ஆன்மாவின் வெற்றி பற்றிய உலகளாவிய கதை. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் இதை எதிரொலிக்க ரஹ்மானின் இசை கதையின் வழியே ஆன்மாவைத் தூண்டும். ரஹ்மானின் பின்னணி இசை மூலம், நாங்கள் உண்மையில் சிறப்பான ஒன்றை உருவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறேன். இந்தத் தொடர் பொழுதுபோக்கு உகந்ததாகவும் ஊக்கமளிக்கக் கூடியதாகவும் இருக்கும்"என்கிறார் அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர்.
டாம் ஃபெல்டன், லிப்பி மாய், மோலி ரைட், ரால்ப் அடேனி, ஜேம்ஸ் முர்ரே, லிண்டன் அலெக்சாண்டர், ஜோன்னோ டேவிஸ், சைமன் லெனான் என பலர் நடிக்கின்றனர். ஒரு சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த 'காந்தி' வெப் சீரிஸ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications