காந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா
Recommended Video
சென்னை: காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கி தான் என பெரியார் கூறியதை நினைவு கூர்ந்து பேசினார்.
கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா பெரியாரின் கருத்தை நினைவு கூர்ந்து பேசினார்

இது குறித்து சூர்யா பேசுகையில், கோட்சே காந்தியை சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோரும் வன்முறையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கேட்சேவின் அந்த துப்பாக்கியை எடுத்து சுக்குநூறாக உடைத்துவிடுங்கள் என பெரியார் சொன்னார்.
அப்போது அய்யா நாங்கள் கோட்சேவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருடைய துப்பாக்கியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என அருகில் உள்ளவர்கள் கேட்டுள்ளார்கள். அதற்கு கோட்சே வெறும் துப்பாக்கி தான் என சாதாரணமாக சொன்னார்" என்று விழாவில் பேசினார். மேலும் ஒவ்வொரு நிகழ்வின் போது ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் பெரியார் சுட்டிக்காட்டிருப்பதாக சூர்யா தெரிவித்தார். காப்பான் படத்தில் பல விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கும் என்றார்.
அண்மையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவும் பேசியிருந்தார்.
இதேபோல் முன்பு நடிகர் கமல் ஹாசன் காந்தியை கொன்ற கோட்சே குறித்து பேசிய கருத்து சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications