சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கி கணக்கில் எஸ்எம்எஸ் முறையில் பணம் திருடும் கும்பல்.. சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாக எஸ்எம்எஸ்சை காரணம் காட்டி பணம் கேட்டால் ஏமாற வேண்டாம் என்று சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷ்னர் எச்சரித்துள்ளார்

வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு புதிய ரூட்களை யோசிக்கிறார்கள். அப்படி அவர்கள் யோசிக்கும் சில யோசனைகளில் வெற்றியும் பெறுகிறார்கள்.

அவர்களின் பணம் பறிக்கும் புதிய முயற்சிகள் குறித்து ஒவ்வொரு முறையும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து வருகிறார்கள். உஷாராக இருங்கள் மக்களே..

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

சென்னை அடையாறு துணை கமிஷ்னர் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்ந ட்வீட் பதிவில், யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறினால் போலியாக அனுப்பப்படும் SMS களை மட்டும் பார்த்து ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கை பரிசோதித்து கொள்ளவும்" என்று கூறியுள்ளார்,.

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

அவரது அறிப்பில் உள்ள வாட்ஸ் அப் இமேஜ் பதிவில், போலியாக உருவாக்கிய பணம் கிரிடிட் ஆன எஸ்எம்எஸ் முதலில் வருகிறது. பின்னாலேயே வங்கி கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக ஒருவர் வாட்ஸ் அப் செய்கிறார. அந்த எஸ்எம்எஸ்யை பார்க்கும் பெண், ஆம் எனக்கு பணம் வந்துள்ளது என்கிறார்.

போலியானது

போலியானது

உங்கள் வங்கி கணக்கை சொல்லுங்கள், பணத்தை அனுப்புகிறேன் என்கிறார் அந்த பெண். அப்படியே பேட்டிஎம் இருக்கா என்று கேட்டு அதன்படி அனுப்ப சொல்கிறார். இப்படியாக பணம் பறிபோகிறது. இறுதியில் பார்த்தால் அந்த எஸ்எம்எஸ் முற்றிலும் போலியானது என்பது பின்னரே தெரிகிறது.

போலீஸ் அலார்ட்

போலீஸ் அலார்ட்

எனவே தான் சென்னை சைபர் கிரைம் போலீசார்,. உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்ஸை நம்ப வேண்டாம் என்றும் வங்கி கணக்கில் பார்த்து பணம் வந்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். எனவே இனி மக்களே எஸ்எம்எஸ்யை கூட நம்ப வேண்டாம். விழிப்புடன் இருப்பது மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து தப்ப முடியும்.

English summary
some Gang stealing money from bank account via SMS in tamilnadu: Chennai Police create aawarenss to people by social media. ssee the article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X