கமலும், வெங்கட் பிரபுவும்.. நடுவுல கொஞ்சம் கலகலப்பாக்கிய கங்கை அமரனும்!
கமலுக்கு கங்கை அமரன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கலைஞானி கமல்ஹாசன் மட்டுமல்ல, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் கூட இன்று பிறந்த நாள்தான். அதுகுறித்த ஒரு டிவீட் படு கலகலப்பாக பல்டி அடித்துக் கொண்டிருக்கிறது டிவிட்டரில்.. காரணம் கங்கை அமரன்.
கமல் இன்று பிறந்த நாள் கொண்டாடுவதைப் போல வெங்கட் பிரபுவும் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது தந்தையான கங்கை அமரன் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், ரெண்டுபேருமே நவம்பர் 7 ..... இருவருக்குமே வாழ்த்துக்கள் ....!!!

இதற்கு இயக்குநர் சூர்யா ஜேம்ஸ் பாட்டர் என்பவர் போட்டிருந்த ஒரு டிவீட்டில், கமல் சாரும், நீங்களும் ஒரே நாளில் பிறந்ததால் என்னவோ, அவரை போலவே பல நேரங்களில் நீங்கள் அனுப்பும் பதில்கள் எனக்கு புரியாமலேயே போயிருக்கு.. ஆனால் எனக்கு விரும்பம் போல அமையும் பதிலை நான் எடுத்துக்குவேன். Its makes me happy என்று கூறியிருந்தார்.
ரெண்டுபேருமே நவம்பர் 7 ..... இருவருக்குமே வாழ்த்துக்கள் ....!!!
— [email protected] (@gangaiamaren) November 7, 2018
இதற்கு வெங்கட் பிரபு ஹாஹாஹா என்று சிரித்து பதிலளித்திருந்தார். விடுவாரா கங்கை அமரன்.. எங்கிருந்தோ வந்த அவர் டக்கென உள்ளே புகுந்து போட்டார் பாருங்க ஒரு பதிலடி.. அது இதுதான்...
கமல் சாரும், நீங்களும் ஒரே நாளில் பிறந்ததால் என்னவோ, அவரை போலவே பல நேரங்களில் நீங்கள் அனுப்பும் பதில்கள் எனக்கு புரியாமலேயே போயிருக்கு.. 😅😅
— Surya James Potter (@SuryaJames_dir) November 7, 2018
ஆனால் எனக்கு விரும்பம் போல அமையும் பதிலை நான் எடுத்துக்குவேன். Its makes me happy😋😋😋 @vp_offl
புரியாததை புரிந்துகொள்ள முற்படும் போதுதான் புரியாத ஒன்று புரிந்து கொள்ளும் புரிதல் புரியும் .... புரிந்துகொள்ளுங்கள் புரியும் ...!
புரியாததை புரிந்துகொள்ள முற்படும் போதுதான் புரியாத ஒன்று புரிந்து கொள்ளும் புரிதல் புரியும் .... புரிந்துகொள்ளுங்கள் புரியும் ...! https://t.co/hz6DUNZRQv
— [email protected] (@gangaiamaren) November 7, 2018
உங்களுக்கு புரிந்ததா ஏதாவது??












Click it and Unblock the Notifications