ஏம்மா.. நீதான் பாடுபட்டு பாஜகவை வளர்த்தியா? அண்ணாமலையை விமர்சித்த காயத்ரிக்கு கங்கை அமரன் ‘சுளீர்’!

அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக, காயத்ரி ரகுராமை சாடியுள்ளார் கங்கை அமரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு, பாஜகவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் பதிலடி கொடுத்துள்ளார்.

"ஏம்மா? நீதான் கட்சிய பாடுபட்டு வளர்த்த மாதிரி பந்தா பண்றியே.." என காயத்ரி ரகுராமுக்கு ரிப்ளை செய்துள்ளார் கங்கை அமரன்.

மேலும், "நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத.. இது நான் உங்க அப்பாவோட ஒண்ணா வளர்ந்த உன் சித்தப்பாங்கற முறையில சொல்றேன்.." என்று அட்வைஸ் கூறியுள்ளார் கங்கை அமரன்.

அண்ணாமலையுடன் மோதல்

அண்ணாமலையுடன் மோதல்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பாஜக அண்டை மாநில மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் பின்னர் அக்கட்சியில் விலகுவதாக அறிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலையை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் காயத்ரி ரகுராம், அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் 14ஆம் தேதி சக்தி யாத்ரா என்ற பெயரில் யாத்திரை ஒன்றையும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம் காட்டம்

காயத்ரி ரகுராம் காட்டம்

மேலும், நாள்தோறும் தொடர்ச்சியாக அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் காயத்ரி ரகுராம். இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்களும் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அண்ணாமலை வார் ரூம் நடத்தி, சொந்தக் கட்சியினர் மீதே அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக முதலில் வெளிப்படையாகச் சொன்னவர் காயத்ரி ரகுராம். இப்போது, பாஜகவில் இருந்த நிர்வாகிகள் பலரும் அந்த விமர்சனத்தை வைக்கின்றனர்.

 கட்டிடம் மட்டுமே வளருது

கட்டிடம் மட்டுமே வளருது

இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பாஜகவிற்கு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா இந்த அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார். இந்தக் கட்டிடங்களின் படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, "தமிழ்நாடு பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என நம்புகிறேன்" என்று விமர்சித்தார் காயத்ரி ரகுராம்.

கங்கை அமரன் பதிலடி

கங்கை அமரன் பதிலடி

காயத்ரி ரகுராமின் இந்தப் பதிவுக்கு பிரபல இசையமைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான கங்கை அமரன் பதிலடி கொடுத்துள்ளார். "ஏம்மா? நீதான் கட்சிய பாடுபட்டு வளர்த்த மாதிரி பந்தா பண்றியே.. நீ டைரக்ட் பண்ணியிருக்கிற படமே உன்னால ஒழுங்கா பண்ணத் தெரியல.. நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத.. இது நான் உங்க அப்பாவோட ஒண்ணா வளர்ந்த உன் சித்தப்பாங்கற முறையில சொல்றேன்.." என்று கூறியுள்ளார் கங்கை அமரன். கங்கை அமரன் 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+