100 நாள் வேலைக்கு செல்லும் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏவின் மனைவி! சின்னதுரையின் ஊதியம் வெறும் 11 ஆயிரம்!
சென்னை: கந்தர்வக்கோட்டை தொகுதியின் எம்எல்ஏ சின்னதுரையின் மனைவி 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறாராம். எம்எல்ஏவாக இருந்தாலும் சின்னதுரை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து கந்தர்வக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சின்னதுரை தமிழா தமிழா நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது: எனக்கு அரசாங்கம் மாதந்தோறும் ரூ 1,05,000 ஊதியம் கொடுக்கிறது. அந்த நிதியை கட்சிக்கு கொடுத்து விடுகிறேன்.

கட்சி எனக்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ 11, 250 கொடுக்கிறது. அந்த ஊதியத்தை வைத்து நான் என் குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எம்எல்ஏவாக வெற்றி பெறுவதற்கு நான் யாருக்கும் மதுபாட்டிலோ, பிரியாணியோ, பரிசு பொருட்களையோ ஓட்டுக்கு காசோ கொடுக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் கந்தர்வக்கோட்டை மக்கள் என்னை தேர்வு செய்துள்ளார்கள்.
இதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பிரச்சாரம் செய்ய போன போதே சிலர் ரூ 1000, ரூ 2000, ரூ 5000 என எனக்கு கொடுத்து நீ தைரியமாக போட்டியிடு நாங்கள் வெற்றியடையச் செய்கிறோம் என பொதுமக்கள் பொதுவெளியிலேயே பணம் கொடுத்து உதவினர். அவர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தது மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது.
எனக்கு ரூ 11,250 போதுமானதாக உள்ளது. எனது மனைவி 100 நாள் வேலை திட்டத்திற்கு போய் கொண்டிருக்கிறார். ஆடு, மாடு வளர்க்கிறோம், எங்களது குடும்பம் எளிய குடும்பம். என் வீட்டை பார்த்தாலே தெரியும் பெரிய செலவுகள் ஏதும் கிடையாது. என் மனைவி என்னிடம் கேட்பதெல்லாம் "நீங்கள் 1,05,000 ஊதியம் வாங்குவதாக சொல்கிறார்களே, அதை கண்ணில் காட்டுங்கள் என்கிறார்.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் வங்கி மூலமே பரிவர்த்தனை நடந்து முடிந்துவிடுகிறது. என் மனைவி பத்திரிகை பேட்டிகளில் சொல்வது- ஏழைகளுக்கு உதவி செய்ய என் கணவருக்கு நான் துணையாக இருப்பதில் மகிழ்ச்சி. அவர் எம்எல்ஏ பதவியை பயன்படுத்தி வீட்டிற்கு ஏதாவது செய்வார் என நான் நினைக்கவில்லை என்பார்.
நான் வாங்கும் ரூ 1,05,000 ஊதியமானது உதவியாளர், டிரைவர் ஆகியோருக்கும் வழங்குவார்கள். அவர்களுக்கு என்னை விட ஊதியம் அதிகம்தான். பொதுமக்களுக்கு உதவி செய்ய கட்சி கார் வாங்கிக் கொடுத்துள்ளது. இதில் நான் பெருமையடைகிறேன். எனது 11, 250 ரூபாய் + என் மனைவி சம்பாதிக்கும் பணத்தை வைத்து என் குடும்பத்தை எளிமையாக நடத்தி வருகிறோம்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் மாதம் 35 கிலோ அரிசி வாங்கும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் ஒரு நூற்றாண்டு பாரம்பரியமிக்க சட்டப்பேரவைக்குள் வந்திருப்பதை நான் மகிழ்ச்சியோடு பார்க்கிறேன் என்றார். சின்னத்துரை இந்த நிகழ்ச்சிக்கு வந்த போது கூட ரயிலில் சென்னை வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்து அங்கிருந்து காரில் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தாராம்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை











Click it and Unblock the Notifications