குப்பைகளை இஷ்டத்துக்கு கொட்டினால் அபராதம்! சென்னையில் வீடு வீடாக நோட்டீஸ்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை: சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகாரட்சி சுகாதாரத்துறை தரப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெரிசலும் அதிகரிக்கிறது. சென்னையை தூய்மை நகரமாக்கும் முயற்சிகளை கையில் எடுத்து பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான தெருக்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் கொட்டப்படும் குப்பைகளை லாரிகளில் வந்து தூய்மை பணியாளர்கள் கொண்டு செல்கின்றனர். அது போக வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிகளிலும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அனுப்பவும் குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சுகாதாரத்துறை நோட்டீஸ்: அதாவது, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என மூன்று வகையாக பிரித்து பெறப்படுகிறது. வீடுகள், ஹோட்டல்கள், கடைகள் தொழில் நிறுவனங்கள் என தனித்தனியாக பிரித்து குப்பைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் சென்னை வெள்ளத்திற்கு பிறகு குப்பைகளை பிரித்து வாங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
வீடுகளில் தேங்கிய தேவையற்ற கழிவுகளை மக்கள் கொட்டினார்கள். வழிந்தோடிய வெள்ளத்தால் குப்பைகளும் அதிக அளவு பல இடங்களில் குவிந்தது. தற்போது இந்த பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணிகளில் மாநகராட்சி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மீண்டும் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது.
பிரித்து போட வேண்டும்: "என் குப்பை என் பொறுப்பு" என நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை இடம் பெற்றுள்ளது.
ரூ. 5000 வரை அபராதம்: அதாவது, விதியை மீறினால், தனிநபர் வீடுகளுக்கு ரூ.100 அபராதமும், அபார்ட்மெண்ட்களுக்கு ரூ.1000 அபராதமும், அதிகளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. விதியை மீறினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications