சமையல் கேஸ் சிலிண்டர்.. அதைவிடுங்க, டூப்ளிகேட் ரேஷன் கார்டுக்கு இப்படி செய்யுங்க.. தமிழக அரசின் மாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய ரேஷன் கார்டுகளுக்கு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அதேபோல, தொலைந்த ரேஷன் கார்டினை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. மாதம்தோறும் சராசரியாக, 40,000 பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆனால், புதிய ரேஷன் கார்டுகளை யாருக்கும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எப்படியும் 3 மாதங்கள் கழித்துதான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
கார்டுகள்: இதற்கு காரணம், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருகிறார்களாம்.. அதுமட்டுமல்லாமல், 2 வாரங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனவர்கள்கூட, 1000 ரூபாய் பெறுவதற்காக, பெற்றோரின் கார்டில் உள்ள தங்களின் பெயரை நீக்கி தருமாறு விண்ணப்பம் செய்கிறார்களாம்.
எனவே, உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் பணி முடியும்வரை பெயர் நீக்கத்திற்கு விண்ணப்பித்தால், தாங்களாகவே ஒப்புதல் தராமல், உயரதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்பே அந்த பணியை மேற்காள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், பெயர் நீக்கத்திற்கு ஒப்புதல் அளிப்பதும், கடந்த ஜூலையில் நிறுத்தப்பட்டிருந்தது..
கேஸ் சிலிண்டர்கள்: இதையடுத்து, தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? 2 அல்லது 2-க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை விண்ணப்பதாரர்கள் உபயோகிக்கிறார்களா? என்றும் நேரடியாகவே அவர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கத்திற்காக பிறப்பித்திருந்த உத்தரவு, தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. பயர் நீக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை உணவு வழங்கல் துறை தளர்த்தியுள்ளது.
இணையதளம்: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு மற்றும் ஏற்கனவே உள்ள கார்டில் உறுப்பினர் பெயர் சேர்த்தல் நீக்கம் போன்ற சேவைகளுக்கு பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுகளை கேட்டு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக கட்டினால், புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் உங்களுக்கு வந்துவிடும்.
வழிமுறைகள்: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதை போலவே, தொலைந்த ரேஷன் கார்டுகளையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.. இதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாள வேண்டும்.
- https://www.tnpds.gov.in/என்ற வெப்சைட்டிற்குள் சென்று, வலது புறத்தில் "நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்..
- ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் போன் நம்பரை தந்து, கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்
- இப்போது, விண்ணப்பித்து குடும்ப அட்டை நகலை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான கட்டண தொகையையும் ஆன்லைனிலேயே யுபிஐ அல்லது வங்கி கணக்கு மூலம் செலுத்தினால், உங்கள் வீட்டிற்கே நகல் குடும்ப அட்டை வந்துவிடும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications