சமையல் கேஸ் சிலிண்டர் தேவையா.. வாட்ஸ்அப்பில் வீட்டு கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்வது எப்படி? ரொம்ப ஈஸி
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.. அதேசமயம், இன்றைய சமைய கேஸ் சிலிண்டர்களை புக்கிங் செய்வதும், எளிதாகிவிட்டது.
சமையல் சிலிண்டரை புக்கிங் செய்து பெற்றுக்கொள்வதற்கு இப்போது நிறைய ஸ்மார்ட் வழிகள் வந்துவிட்டன.. அந்தவகையில், போன் கால், SMS, ஆன்லைன்,மொபைல் ஆப், வாட்டஸ்அப் இப்படி பல வசதிகள் உள்ளன.. பல வழிகள் எளிமையான முறையில் வந்துவிட்டாலும்கூட, சிலருக்கு எப்படி கேஸ் புக்கிங் செய்வது என்று தெரியவில்லை.

முதலில் கஸ்டமர்கள் தங்களுடைய செல்போன் நம்பரை, சிலிண்டர் நிறுவனத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும்.. அப்போதுதான், அந்த நம்பரில் இருந்து புக்கிங் செய்ய முடியும்.
எப்படி முன்பதிவு செய்வது: Indane, Bharat Petroleum, HP Gas வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை தங்களின் வாட்ஸ் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.. Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற நம்பர் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.. இந்த நம்பரை செல்போனில் பதிவு செய்து, சேமித்து கொள்ள வேண்டும்.
பிறகு, வாட்ஸ்அப்பில் "Book" அல்லது "Refill" என்று டைம் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.. இந்த மெசேஜிற்கு "தங்களின் ஆர்டர் பெறப்பட்டது" என்ற பதில் வரும்.. மேலும், சிலிண்டர் டெலிவரி செய்யும் தேதியும், அந்த மெசேஜ் மூலமே கிடைத்துவிடும்.
கஸ்டமர்கள்: ஒருவேளை, நீங்கள் HP கேஸ் கஸ்டமர்களாக இருந்தால், 92222 01122 என்ற நம்பர் மூலம் சிலிண்டரை புக்கிங் செய்து கொள்ளலாம்.. இந்த எண்ணிற்கும் வாட்ஸ்அப்பில் "Book" அல்லது "Hi" என்று மெசேஜ் அனுப்பினாலே போதும்.. உங்களுடைய சிலிண்டர் தானாகவே பதிவு செய்யப்பட்டுவிடும்.
ஒருவேளை, நீங்கள் Bharat Petroleum சிலிண்டர் கஸ்டமர்களாக இருந்தால், 1800224344 என்ற நம்பருக்கு "Hi" மெசேஜ் அணுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் புக் செய்யப்பட்டுவிடும்.
இந்த சிலிண்டர் புக்கிங்கை, Paytm, PhonePay, Google pay மூலமாகவும் புக்கிங் செய்யலாம்.. ஒருவேளை, கிரெடிட் கார்டு மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்புவோர், சலுகைகளை சரிபார்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் புக்கிங்: ஒருவேளை நீங்கள், பாரத் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய நினைத்தால், மற்ற கேஸ் கம்பெனிகளை போலவே, இதனையும் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம்.
- முதலில் https://my.ebharatgas.com/bharatgas/Home/Index என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு சென்று, "Quick Book & Pay" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது, சிலிண்டர் ஐடி நம்பர் மற்றும் செல்போன் நம்பரைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு "Continue" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
மொபைல் ஆப்: அதேபோல, பேடிஎம் மொபைல் ஆப்பிலேயே சிலிண்டர் புக்கிங் செய்யும் வசதி உள்ளது.. பேடிஎம் ஆப் ஓபன் செய்து "Book Gas Cylinder" என்ற பக்கத்திற்கு சென்று, சிலிண்டர் ஐடி நம்பரையும், செல்போன் நம்பரையும் பதிவிட்டு புக்கிங் செய்து கொள்ளலாம். அல்லது ஃப்ரீசார்ஜ் மொபைல் ஆப்பிலும் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். "Book a Cylinder" என்ற ஆப்ஷனுக்குள் சென்று, நீங்கள் எந்த ஏஜென்சியில் சிலிண்டர் வாங்குகிறீர்களோ, அதை தேர்ந்தெடுத்து செல்போன் நம்பரை தந்து, கட்டணம் செலுத்தினால் போதும்.. சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications