கேஸ் சிலிண்டர் வேணுமா.. இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. இதை மட்டும் பண்ணுங்க போதும்.. சூப்பர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு பல்வேறு வசதிகள் உள்ள நிலையில், இன்னொரு வசதியும் அறிமுகமாகி உள்ளது.. இதற்கு பொதுமக்களிடமிருந்து பலமான ஆதரவு கிடைத்து வருகிறது.

சமையல் சிலிண்டர்களை புக்கிங் செய்வதற்கு நடைமுறையில் பல வழிகள் இருந்தாலும், சமீபத்தில் "மிஸ்டு கால்" மூலமாக முன்பதிவு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது..

Gas Cylinder Booking and What are the new facilities introduced by Indian Oil Company

இண்டேன் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்காகவே, 8454955555 என்ற செல்போன் நம்பர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நம்பரில் மிஸ்டு கால் கொடுத்தாலே சிலிண்டர் புக் ஆகிவிடும்.

மிஸ்டு கால் வசதி: இந்த வசதியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துவைத்திருந்தார்.. அதுமட்டுமல்ல, சிலிண்டர் இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் நம்பரிலிருந்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 7588888824 என்ற வாட்ஸ் ஆப் நம்பருக்கு, தொடர்பு கொள்வதன் மூலம் சிலிண்டரை பதிவு செய்யலாம். இதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யூபிஐ போன்ற எந்த முறையிலும் பணத்தை நாம் செலுத்தலாம்.

அதனால்தான், தமிழகத்தில் மட்டும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 1.48 கோடி வீட்டு கஸ்டமர்கள் இருக்கிறார்கள்.. இதில், 2.50 லட்சம் பேருக்கு தினமும் சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது.. சிலசமயம், சிலிண்டர் காலியாகிவிட்டால், புக்கிங் செய்வதற்கு கஸ்டமர்கள் மறந்துவிடுகிறார்கள்.. இந்த குறையையும் தீர்ப்பதற்காகத்தான், வாடிக்கையாளர்களுக்காகவே, இந்தியன் ஆயில் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

டெலிவரி: அதன்படி, SMS வசதி உருவாக்கப்பட்டுள்ளது. கடைசி சிலிண்டர் உங்களக்கு எப்போது டெலிவரி செய்யப்பட்டது, எந்த தேதி, எந்த நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டது என்பதெல்லாம் அந்த SMS-ல் இருக்கும்.

Gas Cylinder Booking and What are the new facilities introduced by Indian Oil Company

கட்டணமில்லா செல்போன் நம்பர், வாட்ஸாப் நம்பர், வெப்சைட், மிஸ்டு கால் மூலமாக, கஸ்டமர்கள் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த இலவச நம்பரில், கேஸ் புக்கிங் செய்ததுமே, கஸ்டமர்களின் செல்போனுக்கு உடனே அதை உறுதிப்படுத்தி ஒரு SMS வந்துவிடும்..

வரவேற்பு: அதேபோல, சிலிண்டரை டெலிவரி செய்வதற்கு ஒருநாள் முன்பு, சிலிண்டரின் விலை, டெலிவரி ஆத்தென்டிபிகேஷன் கோட் எனப்படும் 4 இலக்க நம்பர் போன்றவையும் SMS மூலமாக இன்னொருமுறை அனுப்பப்படும். அந்த "Code" நம்பரை, ஊழியரிடம், சொன்னால், அதற்கு பிறகு சிலிண்டரை டெலிவரி செய்துவிடுவார். சிலிண்டர் டெலிவரி செய்த பிறகு, சேவையின் தரம் எப்படி இருந்தது என்று கேட்டு, இன்னொரு SMS அனுப்பப்படும். இந்த வசதிக்கு கஸ்டமர்கள் பெருத்த வரவேற்பை தந்து வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+