எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை
சென்னை: வணிக சிலிண்டர் விநியோகத் தடையால் உணவகத் துறை பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது. சென்னை ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, பெரும்பாலான உணவகங்களில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது.. இந்நிலையில் எம்பி வெங்கடேசன் பதிவிட்டுள்ள ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால், இந்தியாவில் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
தட்டுப்பாட்டை சமாளிக்க வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதுடன், ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. அதேவேளையில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வணிக எரிவாயு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோகத் தடையால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; குறிப்பாகப் பல முன்னணி ஓட்டல்களில் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், விநியோகம் சீரடையாவிட்டால் கடைகளை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மின்சார அடுப்புகள்
தமிழகத்தில் சிலிண்டர் கையிருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க ஓட்டல்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஏற்கனவே ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மற்றும் முதல்வருக்குச் சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
சென்னை ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, பெரும்பாலான உணவகங்களில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. விநியோகம் உடனடியாகச் சீராகவில்லை எனில், உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா கூறுகையில், எரிவாயு தட்டுப்பாட்டால் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
சிலிண்டர் கையிருப்பு
தமிழகத்தில் நிலவும் இந்த இக்கட்டான சூழலை ஆய்வு செய்யத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது சிலிண்டர் கையிருப்பு எவ்வளவு உள்ளது? தினசரித் தேவை எவ்வளவு? என்பது குறித்து விரிவான அறிக்கையை உடனடியாகத் தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. போர் நீடிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய கூடுதல் நெருக்கடிகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
25 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் பதிவு
இந்நிலையில் மதுரை எம்பி வெங்கடேசன், நிலவும் கேஸ் தட்டுப்பாடு விவகாரத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்..
அதில், "வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.. ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.. ஹோட்டல்கள் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு.. சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டன-" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications