வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே நேரம் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

 Gas cylinder price reduction of Rs.171 for commercial use - oil companies

தாவது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை ரூ.2021.50 ஆக குறைந்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 1,118.50 ஆக தொடர்கிறது.

கொல்கத்தாவில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 2132 ஆக விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது 1,960.50 ஆக குறைந்துள்ளது. அதேபோல், மும்பையில் 1,980 ரூபாயில் இருந்து 1,808 ஆக விலை குறைந்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் வணிக சிலிண்டரின் விலை 350.50 ரூபாய் அதிரடியாக உயர்ந்தது.

சிலிண்டர் விலை ஒரே அடியாக 350 ரூபாய் உயர்த்தப்பட்டது வணிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பிறகு கடந்த மாதம்(ஏப்ரல் 1) வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டு இருந்தது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிலயில்தான், இந்த மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது மாதமாக வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையாதது இல்லத்தரசிகளுக்கு ஏமாற்றை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+