வணிக சிலிண்டரின் விலை குறைந்தது.. எதிர்பாராத நல்ல செய்தி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையுமா?
சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எல்பிஜி விலை, கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலையை மட்டுமே பெரிதாக சார்ந்துள்ளது. இவை அதிகமாகும் போது, சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் அதிகரிக்கும். குறையும்போது சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் குறையும்.

கடந்த செப்டம்பரில், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. அதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதுபோலவே, இந்த நவம்பர் 1ம் தேதி, கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. செப்டம்பரில் நிலவிய, அதே 918.50 ரூபாய்தான், நவம்பரிலும் தொடர்ந்தது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டுள்ளது. திடீரென விலை குறைந்ததை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில்தான் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அப்படி இருக்க, இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக காலையிலேயே மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இன்னும் சில மாதங்களில், பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications