கேஸ் சிலிண்டரில் வருது மாற்றம்.. சமையல் சிலிண்டர் காலி? அசத்தும் எல்பிஜியின் "காம்போசிட் சிலிண்டர்"
சென்னை: இண்டேன் நிறுவனம் குறித்த மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. காம்போசிட் சிலிண்டர்கள் என்றால் என்ன தெரியுமா? அதன் செயல்பாடுகள் எப்படி தெரியுமா?
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில்கூட 2 வகையான அறிவிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருந்தது.

முதலாவதாக, 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது.. இந்த அயர்ன் பாக்ஸ்கள், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம்.. அடுத்ததாக, தரமான ரெகுலேட்டர், ரப்பர் குழாய்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
ரப்பர் குழாய்கள்: காரணம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர், ரப்பர் குழாய்களை பயன்படுத்துவதால், அவை தரமற்று இருப்பதாகவும், இதன்காரணமாக நிறைய விபத்துக்களை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதனால்தான், வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த போகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள எல்பிஜி உபகரணங்கள் ஆய்வு மையத்தில், இதற்கான அங்கீகாரம் கிடைத்ததுமே, உடனடியாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது. சிறப்பு சலுகையாக, ரப்பர் குழாய் விலையானது, 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறதாம்.
காம்போசிட் சிலிண்டர்: இந்நிலையில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, கடந்த 2021 இறுதியில், இண்டேன் நிறுவனம் புதியவகை கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது... எனினும், சில மாதங்களுக்கு முன்புதான், மக்களிடம் இந்த சிலிண்டர் பிரபலமாக துவங்கியது.. இந்த சிலிண்டர்களுக்கு காம்போசிட் சிலிண்டர் (Indane Composite Cylinder) என பெயரிடப்பட்டுள்ளது. இவைகளை ஸ்மார்ட்டான சிலிண்டர்கள் என்கிறார்கள்.
எடை குறைவு: இந்த சிலிண்டர் எடை மிகவும் குறைவானது... துருப்பிடிக்காது.. இதனால் தரையில் கறை எதுவும் ஏற்படுத்தாது.. முற்றிலும் பாதுகாப்பானது. தவிர இந்த சிலிண்டர் மாடர்ன் கிச்சன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. காம்போசிட் சிலிண்டர்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையில் பயன்பாட்டிற்கு கிடைகின்றன.

இந்த காம்போசிட் சிலிண்டர்களில் உள்ள ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், எவ்வளவு கேஸ் இதுவரை செலவாகியிருக்கிறது? எவ்வளவு கேஸ் மிச்சமிருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதனால், அடுத்த சிலிண்டர் எப்போது வாங்குவது என்பது குறித்தும் எளிதாக அறிய முடியும்..
ஏற்கனவே, சிலிண்டர் இணைப்பு பெற்றிருப்பவரும், காம்போசிட் சிலிண்டரை வாங்கலாம். இதற்கு, ஏற்கனவே செலுத்திய டெபாசிட் தொகையுடன் கூடுதல் தொகை செலுத்த வேண்டும்....
பெருகும் கஸ்டமர்கள்: இப்போது விஷயம் என்னவென்றால், இந்த புதிய காஸ் இணைப்பு பெறுவோர், காம்போசிட் சிலிண்டர் வாங்கவே ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. இதுவரை கிட்டத்தட்ட 71,000 பேர் காம்போசிட் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கிறார்களாம்.. இதைதவிர, ஏற்கனவே சிலிண்டர் வைத்திருக்கும், 6,000 பேர்களும் இந்த சிலிண்டருக்கு மாறியிருப்பதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications