இனிமேல் கேஸ் சிலிண்டர் ரூ.450க்கு கிடைக்கும்.. யாருக்கு தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா செம
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், சமையல் சிலிண்டர் விலையிலும் புது அறிவிப்பை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
நாடு முழுவதும் அடித்தட்டில் வாழ்ந்து வரும் மக்களுக்காகவே, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டம் துவங்கப்பட்டுள்ளது.. கடந்த 2016 மே 1-ம் தேதி பிரதமர் மோடி இந்த திட்டத்தினை துவக்கி வைத்தார்.. இதன்படி, சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

சிலிண்டர்: அதாவது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவே, இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டது.. எனவே, கேஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதைத்தவிர, சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது, சிலிண்டரில் கேஸ் லீக்கேஸ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் எதிர்பாராமல் நிகழ நேர்ந்தால், வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச காப்பீடு கிடைக்கிறது. இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இப்படி எண்ணற்ற நன்மைகளை இந்த திட்டம் தருவதால்தான, கோடானுக்கோடி மக்கள், உஜ்வாலா யோஜனா திட்டத்தை வரவேற்று வருகிறாரகள்.
இணைப்புகள்: இதுவரை , 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.. கேஸ் அடுப்பு மட்டுமல்லாமல், அதற்கான டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் போன்றவையும் இல்லத்தரசிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இதற்காக ஏற்படும் செலவை மத்திய அரசே வழங்கிவிடுகிறது.
இதுபோக பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வசதியை கருத்தில்கொண்டு, மேலும் பல முக்கிய முடிவுகளை முன்னெடுத்தும், அறிவித்தும் வருகிறது.. அந்தவகையில், உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் சுமித் கோதாரா முக்கிய தகவல் ஒன்றை தற்போது அறிவித்திருக்கிறார்.
உஜ்வாலா திட்டம்: அவர் சொல்லும்போது "ஏழைக்குடும்பப் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு, 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்" என்றார்.
இதுகுறித்து முதன்மைச் செயலாளர் சுபீர் குமார் சொல்லும்போது, "பிரதமரின் முயற்சியால், இத்திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தி, கேஸ் சிலிண்டர்கள் வழங்க துறை மட்டத்திலிருந்து பிஓஎஸ் இயந்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எல்பிஜி சிலிண்டரை ரூ.450 விலையில் பெறுவதற்காகவே, நியாய விலைக்கடையில் உள்ள பிஓஎஸ் இயந்திரம் மூலம் பதிவிடும் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைகள்: ரேஷன் அட்டையில் முழு கோதுமை பெறும் குடும்பங்கள், அதாவது, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளி குடும்பங்கள், ரேஷன் கார்டு/ஆதார் அட்டையுடன் நியாய விலைக் கடை மூலம் தங்கள் எல்பிஜி ஐடியை இணைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு செய்ய வேண்டியது, ரேஷன் கார்டில் முழு கோதுமை பெறும் குடும்பங்கள், அதாவது, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளி குடும்பங்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.. இது தொடர்பான பணிகள் நியாய விலைக் கடை மூலம் தங்கள் எல்பிஜி ஐடியை இணைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்: எல்பிஜி சிலிண்டர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களின் எல்பிஜி ஐடிகளை ஆதார்/ரேஷன் கார்டுகளுடன் வழங்குவது இன்று (நவ 5 முதல் நவ 30), 2024 வரை செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.. ஆகமொத்தம், ரூ.450க்கு சிலிண்டர்கள் கிடைக்க உள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications