Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிலேயே பாலியல் “கேஸ்” இருக்கே.. “ஆக்‌ஷன்” எடுப்பீங்களா குஷ்பு? அண்ணாமலையை கோர்த்துவிட்ட காயத்ரி

“பதவிக்காக பாஜகவில் பணியாற்றவில்லை. நான் குறிவைக்கப்பட்டேன், சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. நான் ஒரு குழுவால் துன்புறுத்தப்பட்டேன். அதனால்தான் நான் வெளியே வந்தேன்.”

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு உள்ள நடிகை குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவில் உள்ள பாலியல் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பமில்லையா? உங்களை அனுப்ப அண்ணாமலை திட்டமிட்டாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

2024 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாகிவிட வேண்டும் என்ற நிலைபாட்டில் குஷ்பு உறுதியாக இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

2024 தேர்தலில் குஷ்புவுக்கு சீட் வழங்குவதை தவிர்க்கவே அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி ரகுராமும் அதையே தெரிவித்து உள்ளார்.

 குஷ்புவுக்கு வாழ்த்து

குஷ்புவுக்கு வாழ்த்து

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "வாழ்த்துக்கள் திருமதி குஷ்பூ சுந்தர். பெண்களைப் பற்றிய அண்ணாமலையின் உணர்வற்ற வதந்திகளை, பெண்களின் மீது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவோ அல்லது உங்களையும் என்னையும் பற்றிய அவருடைய கருத்துக்களையும் கண்டிப்பாகப் பாதுகாப்பீர்கள்?

பெண்ணை கொன்ற ராணுவ வீரர்

பெண்ணை கொன்ற ராணுவ வீரர்

சென்னை பெண்ணை கொலை செய்த ராணுவ வீரருக்கு எதிராக உங்கள் முதல் குரல் இருக்கட்டும். (துப்பாக்கிகள் வெடிகுண்டுகளை பயன்படுத்த அவர்களுக்கு உரிமை உள்ளது) ராணுவ வீரர்களை பாதுகாப்பதாக அண்ணாமலை உறுதியளித்துள்ளார். தேஷ் பக்தர் ராணுவ வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை எப்படிக் கொல்ல முடியும்?

தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையா?

தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையா?

இது தேஷ் பக்தியா? அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. ராணுவம் மத்திய அரசுக்கு (பாஜக) பொறுப்பு. தமிழக பெண் கொலைக்கு பாஜகவை குறை கூற முடியுமா, பழி எடுப்பார்களா, பொறுப்பை ஏற்குமா? திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களே, உங்கள் பதவி 1 வருடமா? பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பமில்லையா?

அண்ணாமலை திட்டமா?

அண்ணாமலை திட்டமா?

உங்களை அனுப்ப அண்ணாமலை திட்டமிட்டாரா, அரசியல் செய்ய விடவில்லை? தமிழகத்தை விட்டு அனைவரும் அனுப்பப்பட்டனர். மகளிர் ஆணையம் கவுரவ முன்னுரிமை பெற மட்டுமே. பா.ஜ.,வில் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன, அதை தீர்த்து வைப்பீர்களா அல்லது மறைக்க கம்பளத்தின் கீழ் துலக்கப்படுமா?

எல்.முருகன் காலத்திலேயே பதவி

எல்.முருகன் காலத்திலேயே பதவி

நான் பாஜகவில் இருந்திருந்தால் பதவி கிடைத்திருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். நான் கட்சியில் இருந்தாலும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று நான் ஓரங்கட்டப்பட்டிருப்பேன். குஷ்பு அவர்கள் 2020 ஆம் ஆண்டு டாக்டர் எல்.முருகன் தலைமைக் காலத்திலேயே இந்த கௌரவப் பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பதவிக்காக பணியாற்றவில்லை

பதவிக்காக பணியாற்றவில்லை

ஆனால் கட்சியில் 20 - 30 ஆண்டுகள் பணியாற்றிய பல மூத்த உண்மையான பெண் காரியகர்த்தாக்கள் இருந்தனர். ஆனால் குஷ்பு அவர்கள் புதியவர் அதனால் தான் இந்த தாமதம். நாங்கள் யாரும் பதவிக்காக பாஜகவில் பணியாற்றவில்லை. நான் குறிவைக்கப்பட்டேன், சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

துன்புறுத்தப்பட்டேன்

துன்புறுத்தப்பட்டேன்

நான் ஒரு குழுவால் துன்புறுத்தப்பட்டேன், அதனால்தான் நான் வெளியே வந்தேன். பி.எல்.சந்தோஷ் ஜிக்கு நன்றி. எனக்கு சென்சார் போர்டு வழங்கப்பட்டாலும், கடந்த ஆண்டு அக்டோபரில் நான் அதை மறுத்தேன். என் பெயர் இருந்தது. எனக்கு ஆர்வம் இல்லை. சினிமா சென்சார் போர்டில் மதிப்புமிக்க நேரத்தை செலவிடக்கூடிய பலரை நான் பரிந்துரைத்தேன். அவர்கள் அதைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+