உங்க படத்துல் 4 பாட்டு, 4 ஸ்டன்ட்.. மிஞ்சி போனா என்னா இருக்கு?.. பேட்ட டைரக்டரை வம்பிழுத்த காயத்ரி
சென்னை: உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும், 4 பாடல்களும் 4 சென்டிமென்ட் காட்சிகளும் இருக்கும். இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021 ஆம் ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்குள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன.

நடிகர்கள்
இந்த சட்டத் திருத்தத்திற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதில் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில் ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்து சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் பக்கம்
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும் 4 பாடல்களும் 4 சென்டிமென்ட் காட்சிகளும் 2 mass opening காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள்.

நெட்டிசன்கள்
வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா துறையில் இருந்து கொண்டு தற்போதைய சினிமாக்களில் கருத்து சுதந்திரம் இல்லை என காயத்ரி கூறுவதை நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள்.

தேசம்
இதற்கு பதிலளித்த காயத்ரி, முதலில் எனக்கு தேசம்தான் முக்கியம். அதன் பிறகுதான் தொழில் எல்லாமே. தேசத்திற்கு எதிராக நான் எதையும் செய்ய மாட்டேன் என ஒரு ட்வீட்டில் காயத்ரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications