விஜய் கட்சியில் காயத்ரி ரகுராம் இணைகிறாரா? காட்டுத்தீபோல் வரும் தகவல் - அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தில் நடிகை காயத்ரி ரகுராம் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும், பாஜகவையும் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். திமுகவையும், தமிழக அரசையும், திமுக கூட்டணி கட்சிகளையும் ஆதரித்து பதிவுகளை வெளியிட்டு வந்த அவர் திமுகவில் இணைய முனைப்பு காட்டி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக அவர் பதிவிட்டும் வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் யார் யாரெல்லாம் இணையப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பலர் கணிப்புகளை வெளியிட்டு வந்தனர். தமிழருவி மணியன், பழ கருப்பையா தொடங்கிய நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் என பலரது பெயர்களை குறிப்பிட்டு இருந்தனர்.
குறிப்பாக காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தும் அவருக்கு பதவிகள் வழங்கப்படாததால் அதிருப்தி இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அவர் விஜய்யின் அரசியல் கட்சியில் இணைவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் எக்ஸ் தளத்தில், "கட்சி தாவ தயாராகும் நடிகை காயத்ரி ரகுராம்! சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி தனக்கு எந்த பதவியும் இப்போதைக்கு தரப்படாது என்றபோதிலும் அரசியல் அடைக்கலம் தேடி அங்கு இணைந்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்த TVK Party யில் இணைய புஸ்சி ஆனந்த் உடன் பேச்சுவார்த்தை என்ற தகவல்." என்ற பதிவு வளம் வருகிறது.
இதை ரீட்வீட் செய்து இருக்கும் காயத்ரி ரகுராம், "இந்த விரக்தியடைந்த ஆன்மாவிற்கு நான் வருந்துகிறேன். தீவிர லூசுதனம் எப்போதும் என்னை குறிவைக்கிறது. எப்போதும் இந்த கோமாளி அண்ணாமலையின் டயபர் தூக்கிகள். என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாக பணியாற்றக்கூடிய இடம் அதிமுக. நிர்வாகம் தெரிந்த அ.தி.மு.க மட்டுமே ஆட்சி செய்ய மக்கள் விரும்புவார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அதிமுக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. நான் எப்போதும் அ.தி.மு.க மூலம் சேவை செய்வேன் மக்களுக்காக. பதவிக்கு ஒதுக்கப்பட்ட வேலை, நான் அது இல்லாமல் வேலை செய்வேன். 6 நாட்கள் நான் குடும்ப திருமணத்தில் பிஸியாக இருந்தேன். அதுக்காக உங்களுக்கெல்லாம் ஏன் இப்படி குழப்பம். எப்போதும் குழப்பமான பைத்தியக்காரர்கள் அண்ணாமலையின் வார்ரூமில் மட்டுமே இருக்க முடியும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications