என்னை சின்னம்மானு கூப்டனும்.. மாஜிக்களை அதிர வைத்த காயத்ரி ரகுராம்? எல்லாம் வார்ரூம் வேலை..புகைச்சல்!
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் எடப்பாடியிடம் காயத்ரி ரகுராமை பற்றிய புகார்களை அடுக்கி இருந்தார்கள் என ட்விட்டரில் பதிவுகள் அதிகமாக வந்த நிலையில், அது அண்ணாமலையின் வார் ரூமின் வேலை என குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம். மேலும் அண்ணாமலையின் வார்ரூமுக்கு என் பெயரைக் களங்கப்படுத்துவதைத் தவிர வேறு அரசியல் தெரியாது அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகல், சசிகலா, டிடிவி, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான விவாதம், மக்களவைத் தேர்தலில் படுதோல்வி, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியதாகவும், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா அணியில் இருக்கும் நிர்வாகிகளை கட்சியில் சேர்த்து அவர்களுக்கு உரிய பதவி, மரியாதை அளிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த செயற்குழுவின் 9 தீர்மானங்களும், 2 சிறப்பு தீர்மானங்கள் உட்பட மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே,"இன்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் எடப்பாடியிடம் காயத்ரி பற்றிய புகார்களை அடுக்கி இருக்கிறார்கள். தேர்தல் பரப்புரைக்கு ஒவ்வொரு தொகுதிக்கு செல்ல புது AC கார், சென்னையில் இருந்து பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு வருவதற்கு முதல் தர விமானம் ஏற்பாடு, தாங்குவதற்கு 5 நட்சத்திர ஓட்டல், உயர்தர உணவு என்று அதிகளவில் செலவு செய்துள்ளோம் என்று குமுறிய நிர்வாகிகள். இதை விட கொடுமை என்னவென்றால் தன்னை "சின்ன அம்மா" என்று அழைக்க உத்தரவு வேறு." என ட்விட்டர், வாட்ஸாப் உள்ளிட்டவற்றில் செய்திகள் பரவியது.
இந்நிலையில் அது அண்ணாமலையின் வார் ரூமின் வேலை என விமர்சித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," அண்ணாமலையின் வார்ரூமுக்கு என் பெயரைக் களங்கப்படுத்துவதைத் தவிர வேறு அரசியல் தெரியாது. அதற்கு மேல் எதுவும் கடக்கவில்லை. Ask your source to stop gassing around some nonsense. அ.தி.மு.க., மிகப் பெரிய கட்சி என்பதால், புகார்கள் உண்மையாக இல்லை என்றால் கூட அல்லது இருந்தாலும் கூட இதுபோன்ற சின்ன சின்ன புகார்களை ஏற்க மாட்டார்கள். அவர்கள் அரைகுறை அண்ணாமலை போல் நினைக்கிறீர்களா? அண்ணாமலையின் வார்ரூம் ஜோக்கர்கள்.
பிரச்சாரத்தின் போது அண்ணாமலை எங்கே சாலையில் தூங்குகிறார்? ஓசியில் அண்ணாமலை தனது முழு வாழ்க்கையையும் 3 ஆண்டுகள் வாழ்கிறார். 20 லட்சம் கட்சி அவருக்கு செலவழிக்க, நண்பர்கள் 8 லட்சம் கொடுக்கிறார்கள், இதை விட ஐடி மற்றும் இடி பெயரில் அவர் பணம் வசூலித்துள்ளார் என்று மக்கள் கூறுகின்றனர். ஆருத்ரா வழக்கு, மயிலாப்பூர் தேவநாதன் கைது பணமெல்லாம் எங்கே போனது? அந்த முகத்திற்கு ஹெலிகாப்டர் ஒரு குறைச்சல். உங்களுக்கு கொஞ்சம் மூளையைக் கொண்டுவரும் ஏதாவது வேலையைப் பார்க்கச் செல்லுங்கள். I have never seen a wimp like Annamalai and half baked war room." என கூறியுள்ளார்.

-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை












Click it and Unblock the Notifications