ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தும் சொந்த ஊரில் அண்ணாமலை எடுத்த வாக்குகள் 23 மட்டுமே.. காயத்ரி கிண்டல்

1000 ரூபாய் கொடுத்தும் சொந்த ஊரில் சொந்த பூத்தில் 23 ஓட்டுகள் மட்டுமே வாங்கி அண்ணாமலை- காயத்ரி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர்களுக்கு ரூ 1000 கொடுத்தும் சொந்த ஊரில் அதுவும் சொந்த பூத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாங்கிய வாக்குகள் வெறும் 23 மட்டுமே என காயத்ரி ரகுராம் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தவர் காயத்ரி ரகுராம். அவர் அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் வகித்தவர். ஒரு கட்டத்தில் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு பின்னர் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டது.

இந்த பதவியில் இருந்த காயத்ரி இதுவரை மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவதியுறும் ஏராளமான தமிழர்களை மீட்டெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சி துறை நிர்வாகி என்ற முறையில் அண்ணாமலை தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தை காயத்ரி பதிவு செய்திருந்தார்.

 திருச்சி சூர்யா சிவா

திருச்சி சூர்யா சிவா

இதையடுத்து அவர் திருச்சி சூர்யா சிவா - டெய்சி சரண் ஆடியோ உரையாடல் விஷயத்தில் கருத்து கூறியிருந்தார். இதையடுத்து காயத்ரி 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த பதவி தீனாவுக்கு ஒதுக்கப்பட்டது. கட்சிக்கு களங்கம் விளைவித்ததால் அவரை சஸ்பெண்ட் செய்கிறோம் என அண்ணாமலை குறிப்பிட்டிருந்ததால் அது தனது மனதை பாதித்ததாக தெரிவித்திருந்தார்.

களங்கம்

களங்கம்

தான் கட்சிக்கு ஒரு போதும் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதில்லை என காயத்ரி பேட்டி கொடுத்தார். இதையடுத்து துபாய் ஹோட்டலில் காயத்ரி என்ன செய்தார் தெரியுமா என இரட்டை அர்த்தம் வரும் வகையில் அவர் மீது கட்சியினரிடையே பொய்யான அவதூறை பரப்பியதாக காயத்ரி புகார் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகள்

அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகள்

இதையடுத்து அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். இந்த நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

இளமை காலம்

இளமை காலம்

என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை நடத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார்.

அமர்பிரசாத் ரெட்டி

அமர்பிரசாத் ரெட்டி

இதை கண்டித்த அமர்பிரசாத் ரெட்டி, இது கூட்டணிக்கு அழகல்ல என அதிமுகவை விமர்சித்திருந்தார். மேலும் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக- பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளில் இருந்து பெரும் தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் பது எப்படி அந்த கட்சி தலைவர்கள் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முடிவு எடுத்தார்களோ அதே போல் நானும் ஒரு தலைவன். தலைவனாகவே முடிவெடுப்பேன்.

 தமிழகத்தில் தோசை சுட

தமிழகத்தில் தோசை சுட

நான் தமிழகத்திற்கு தோசை சுடுவதற்காகவோ இட்லி சுடுவதற்காகவோ இங்கு வரவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சொந்த ஊரில் சொந்த பூத்தில் அண்ணாமலை 1000 ரூபாய் கொடுத்தும் வாங்கி ஓட்டு 23 மட்டுமே. எதிர்த்து போட்டியிட்ட முகம் தெரியாத திமுக வேட்பாளரும் செந்தில் பாலாஜியோட வலது கைக்கு வலது கையா இருந்த திமுக வேட்பாளர் வாங்கி ஓட்டு 582 அதாவது 96% வாக்கு வாங்கி அண்ணாமலையை வெறும் 3% மட்டுமே வாங்கும் அளவு தான் இவர் தகுதி. சொல்லுங்க அண்ணாமலை நீங்கள் ஜெயலலிதா , கருணாநிதி போல் ஒரு தலைவர் என்று நீங்களே சொல்லி கொள்ள வெக்கமாக கூச்சமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+