ரேப்ன்னு சொன்னாரே மன்சூர் அலிகான்! "சேரி"யை போல அந்த அர்த்தம் வச்சிக்கலாமா? குஷ்புவிடம் கேட்ட நடிகை
சென்னை: சேரி என்றால் அன்பானவர் என்று பொருளா, அப்போ மன்சூர் அலிகான் ரேப்னு சொன்னாரே அதற்கு தெலுங்கில் நாளை என்ற அர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாமா என நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு த்ரிஷா பதிலடி கொடுத்து இனி அவருடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

மன்சூர் அலிகான் தான் காமெடியாக பேசியதாகவும் த்ரிஷாவை உயர்வாக பேசியதாகவும் ரேப் என்றால் நிஜத்தில் ரேப் செய்வதா என்றும் கேட்டு பல்வேறு விளக்கங்களையும் அளித்திருந்தார். ஆயினும் அவர் பேசியது தவறுதான் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது . இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த பிரச்சினைக்கு குஷ்பு எந்தவொரு ரியாக்ஷனும் காட்டவில்லை. எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படும் விவகாரத்திலும் பொங்கவில்லையே ஏன் என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் நெட்டிசன்களும் குஷ்புவுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு குஷ்பு பதில் அளித்த போது கடுமையான வார்த்தையை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது இதுதான். சாரி! என்னால் உங்களை போல் சேரி மொழியில் பேச முடியாது.
ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள் என தெரிவித்திருந்தார். குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு.
“Rape” in Telugu means tomorrow. Is that what Manoos Ali khan meant? Is that how cheaply you get away from mistakes? Own up mistakes and apologies and move on or else how can you have rights to correct others mistake? The whole world knows what you meant and your mistake. Don’t… https://t.co/k2RwLqy77m
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) November 22, 2023
இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரின் ஆதங்கங்கள் வலுத்தன. இந்த நிலையில் சேரி மொழி என தான் கூறியதற்கு புதியதொரு விளக்கத்தை குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நான் பயன்படுத்தி மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது.ப
பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள். நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் எப்போதும் முன்வரிசையில் இருப்பேன். என்னை எதிர்ப்பதன் மூலம் புகழ் பெற வேண்டும் என நினைத்து செய்யும் செயல்களுக்கு நீங்கள் தகுதியானவர்கள் அல்ல என பதிவிட்டிருந்தார். குஷ்புவின் புதுமாதிரியான விளக்கத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Rape என்றால் தெலுங்கு மொழியில் நாளை என்று அர்த்தம். அப்படியென்றால் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய ரேப்பிற்கு நாளை என்ற அர்த்தத்தை கொள்ளலாமா? தவறுகளில் இருந்து கீழ்த்தரமாக எப்படி விலகுகிறீர்கள்? தவறுகளை திருத்துங்கள், மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள்.
இல்லாவிட்டால் அடுத்தவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லை. ஓவர் ஸ்மார்ட்டாக செயல்படாதீர்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் காயத்ரி. மற்றொரு ட்வீட்டில் Repu- Rape, Cheri, Cherry, Seri எல்லாமே கேட்பதற்கு ஒரே ஒலியை கொடுக்கும். ஆனால் சொன்ன கருத்து தவறு. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது முக்கியம். மன்சூர் அலிகான் கூறியது தவறு என்றால் குஷ்பு அக்கா கூறியதும் தவறுதான் என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications