பேனா பேனாவாக இருக்கக் கூடாது.. வரலாறு படைக்க வேண்டும்.. பாஜகவை கடுப்பேற்றும் காயத்ரி
பேனா சின்னம் தமிழகத்தின் ஜனநாயகத்தின் குரலாக இருக்க வேண்டும்- காயத்ரி ரகுராம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராமோ தமிழக மக்களின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ 81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் அமைக்கவுள்ளது.
அதாவது மொத்தம் 650 மீட்டர் தொலைவில் கடலில் பாலம் அமைக்கப்பட்டு அதில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க மாதிரி வடிவங்கள் எல்லாமே தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைய பேர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாஜக சார்பில் கருத்து தெரிவித்த எம்சி முனுசாமி கூறுகையில் கடலில் நினைவு சின்னம் அமைப்பது மிகவும் அபத்தமானது. கடற்கரையை காக்கும் ஒரே சமுதாயம் மீனவர்கள்தான்.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. யாரும் கடற்கரைக்கு உள்ளே நினைவுச் சின்னம் அமைக்கவில்லை. கருணாநிதி தான் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார். ஆனால் கருணாநிதிக்கு வைக்கப்படும் பேனா சின்னமோ 137அடியாகும்.

திருவள்ளுவரைவிட கருணாநிதி உயர்ந்தவரா
அப்படியென்றால் திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா என முனுசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பேனா பொதுவானது, பேனா சிலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக் கூடாது.

சுற்றுலாவை பார்வையிட
அனைவரும் சுற்றுலா பார்வையிடக் கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும். பேனா ஒரு சிறந்த கருவியாகும். சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications