Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுதுகொண்டே.. கெஞ்சி வாங்கிய Z பிரிவு பாதுகாப்பு! அண்ணாமலையை தாக்கிய காயத்ரி.. "இதை" கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கு முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார் அதன் மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம். இதையடுத்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை, அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் வைத்து வருகிறார்.

அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

பாஜக மோதல்

பாஜக மோதல்

கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டார்கள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது, என்று கூறிவிட்டு காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

அண்ணாமலைக்கு இசட் பிரிவு

அண்ணாமலைக்கு இசட் பிரிவு

அதோடு அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் கடும் விமர்சனம் வைத்துள்ளார். அண்ணாமலைக்கு இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஒய் பிரிவு என்பது 1 அல்லது 2 கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் பணியாளர்கள் உட்பட 28 பணியாளர்கள் பாதுகாப்பு அளிப்பது ஆகும். இதுதான் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு 25 பாதுகாப்பு பணியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த பாதுகாப்பின்படி முதல் கட்டமாக 33 பாதுகாவலர்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். அண்ணாமலைக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

காயத்ரி

காயத்ரி

இதை கிண்டல் செய்துள்ள காயத்ரி ரகுராம், பல உண்மையான காரியகர்த்தாக்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர், இப்போதும் கூட ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள்.. தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருமுறை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்தால், தேசத்திற்காக உயிரை தியாகம் செய் கேலி செய்தார்கள். இப்போது வளர்ப்பு மகன் அழுதுகொண்டே கெஞ்சி Z பிரிவு பாதுகாப்பைக் கோரினார், வளர்ப்பு மகனுக்கு தந்தையால் இப்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது அச்சுறுத்தலுக்காக அல்ல, வீணான விளம்பரதாரர்களுக்காக. Y பிரிவு பாதுகாப்பு போதாதா?

தியாகம்

தியாகம்

ஏன் இவ்வளவு ஆடம்பரம்? தமிழ்நாட்டையே தமிழகம் என்று அழைத்த பெருமைமிக்க கன்னடருக்கு பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக ஏழை எளிய சாமானியர்களுக்கு அதே பணத்தை செலவழித்திருக்கலாம், என்று காயத்ரி ரகுராம் போஸ்ட் செய்து உள்ளார். அவர் தனது முந்தைய ட்விட்டில், பெருமைமிக்க கன்னடிகா அண்ணாமலை.. அவரது பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணித்து உள்ளார். டெல்லியில் இருந்து தி தீனதயாள் உபாத்தியா அவர்களின் தபால் தலை ஒட்ட வேண்டும் என்று தெரிந்த அண்ணாமலை, அவரது பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்று குறிப்பிட வேண்டுமென்று தெரிய வில்லையா?

 ஆடம்பரம்

ஆடம்பரம்

அண்ணாமலை ஒரு பெருமைமிக்க கன்னடர் என்று கர்நாடகாவில் ஒவ்வொரு முக்கிலும் மூலையிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவரை ஏன் தனது வளர்ப்புத் தந்தை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தார்? தமிழ்நாட்டில் பெருமைமிக்க தமிழனும்.உண்மையான பாஜக தொண்டனும் இல்லையா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறித்து போஸ்ட் செய்த காயத்ரி, அபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன்.அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான், என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+