“பாத்ரூம் கேமரா”.. மோடி, அமித்ஷாவின் ஆடியோ, வீடியோவையும் அண்ணாமலை கசியவிடலாம் - காயத்ரி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ரகசியத்தையும் ஆடியோ வீடியோ மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கசியவிட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என பாஜக முன்னாள் நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த ஆடியோ தான் பேசியது இல்லை என்று பிடிஆர் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று 2 வது ஆடியோவையும் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள பாஜக முன்னாள் நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம், "மற்றவர்களை ரேகார்டிங் செய்வதன் மூலம் அண்ணாமலை சுத்தமாக இல்லை, ஊழல்வாதி என்பதை காட்டுகிறது. நிதியமைச்சர் சுத்தமாக இருப்பது போல் தெரிகிறது. எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் அல்லது மகன் அல்லது மருமகன் யாரேனும் தவறு செய்தால், திராவிட மாடலை மீறிச் சென்றிருந்தால் கழகத்தில் பி.டி.ஆர் கண்டிக்கிறார் என்பதை காட்டுகிறது.

Gayathri Raghuram warned Modi and Amit sha about Annamalai audio, video leak

இது திமுகவிற்கு/ கழகத்திற்கு ஆரோக்கியமானது. விரக்தியடைந்த அண்ணாமலை குணம் தனியுரிமையை மீறும் ஆடியோ, வீடியோக்களை ரேகார்ட் செய்வதில் அனைவருக்கும் பின்னால் இருப்பது போல் தெரிகிறது. நேரத்தை வீணடிப்பது அண்ணாமலையின் மலிவான அரசியல். இது ஒரு தலைமையா? அது வெட்கக்கேடானது. இது அண்ணாமலை தவறான வழியில் வெளிப்படுத்துவதாகும்.

இந்த ஆடியோவை பெற நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தினீர்கள்? இதை பதிவு செய்ய நீங்கள் யாரை விதைத்தீர்கள்? நிச்சயமாக அதிக பணம். இந்த அண்ணாமலை தேசிய அரசியலில் இருந்தும், மாநில அரசியலில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். அவர் தனது சொந்த கட்சியில் உள்ள சொந்த மக்களுக்கு இதை செய்கிறார். இது ஒரு கட்சி தலைவர் செய்யும் வேலையா!

பாத்ரூமில் கேமரா வச்சா என்ன நாறுமோ அதான் அண்ணாமலை செய்வது. அநாகரீகத்தின் உச்சம் அண்ணாமலை செய்யும் வீடியோ ஆடியோ அரசியல்." என்று குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு பதிவில், "அன்புள்ள பொதுமக்களே, இதுபோன்ற மலிவான மனநிலை தலைவருடன் உங்கள் ஆண் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பாக பூட்டி வைத்திருங்கள்.

அண்ணாமலையின் நாட்டிற்கான சேவை இலவச ஆடியோ மற்றும் வீடியோ சேவை. முழு பாதுகாப்புடன் உள்ள மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர் அலுவலக அறைக்குள் ஏதேனும் ரெக்கார்டர் மூலம் அவர் நுழைய முடியும்போது, அவர் நாட்டிற்குள் ஒவ்வொரு வீட்டிற்குள் இதைச் செய்யலாம். அண்ணாமலை மாதிரியான மனிதர்கள் தமிழகத்திற்கு ஆபத்தானவர்கள்.

அண்ணாமலை இளைஞர்களுக்கு சிறந்த உதாரணம் அல்ல. ரேகார்டிங் ஒரு குற்றம், இப்படி பல குற்றங்கள் நடக்கும்." என்று பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு பதிவில், பிரதமர் மோடி ஜி, அமித் ஷா ஜி, நாளை அண்ணாமலை உங்கள் ரகசியத்தையும் ஆடியோ வீடியோ மூலம் கசியவிட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம்." என்று எச்சரித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+