ராஜகண்ணுவ வச்சி கோடி கோடியா சம்பாதிக்கறீங்க.. கேட்டா லட்சத்தை கொடுக்கறீங்க.. காயத்ரி கேள்வி
சென்னை: ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியின் நிஜவாழ்க்கை கதையை வைத்து கோடி கணக்கில் சம்பாதித்த சூர்யா, அனைவரும் கேள்வி எழுப்பியவுடன் சில லட்சங்களை பார்வதி அம்மாளுக்கு தருவதாக நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை சூர்யா தவறாக சித்தரித்ததாக வன்னியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரும் ரூ 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கண்டனங்கள் ஒரு புறம் இருந்து வரும் நிலையில் காவல் துறையின் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் மனைவி பார்வதி பெயரில் ரூ 10 லட்சம் டெபாசிட் செய்வதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

காலத்திற்கு பின்னர்
இதன் மூலம் வரும் வட்டியை பார்வதி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவரது காலத்திற்கு பின்னர் அவரது வாரிசுகள் அந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதை பெரும்பாலானோர் பாராட்டி வரும் நிலையில் பாஜக கலை கலாசார பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

சமூகநீதி
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி.." என விமர்சித்துள்ளார். மேலும், சூர்யாவுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களை "திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா?

ஒய் டென்ஷன் கூல்
அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். why tension? Cool.." என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. அது போல் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜாவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

பா ரஞ்சித்
அது போல் நடிகர் சூர்யாவை ஆதரித்து கருத்து பதிவிட்ட இயக்குநர் பா ரஞ்சித்தையும் காயத்ரி விமர்சித்துள்ளார். ரஜினியால் இரு படங்களை இயக்கி பெரிய இயக்குநராகிய நீங்கள் அண்ணாத்த படத்தை யூடியூப் சேனல் விமர்சித்த போது அவருக்கு ஆதரவாக நிற்காமல் இப்போது சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கிறீர்களே என கேள்வி எழுப்பியிருந்தார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications