திடீரென சைலண்ட் மோடில் காயத்ரி ரகுராம்.. பாஜகவிலிருந்து விலகுகிறாரா?.. அனல் பறக்கும் ட்விட்டர்!
சென்னை: நான் ஒரு வலிமையான சனாதன பெண் என்றும் தேசத்திற்காக உழைப்பேன் என்றும் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக உள்ளவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார். பாஜகவையோ அதன் சித்தாந்தத்தையோ அல்லது நிர்வாகிகளையோ விமர்சிப்பவர்களுக்கு உரிய பதிலடியை கொடுப்பார்.
அது போல் திமுக அரசை கண்டித்தும் அதன் திட்டங்களை கண்டித்தும் ட்வீட் போடுவார். உதயநிதி முதல் ஸ்டாலின் வரை அனைவரையும் அதிரடியாக சீண்டி கருத்துகளை பதிவிடுவார். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் காயத்ரிக்கு பதிலளிக்க மாட்டார்கள். ஆனால் திமுகவினர் காயத்ரியின் ட்விட்டர் பக்கத்திற்கு வந்தால் வார்த்தை போர் மூளும்.

நிர்வாகிகள் நீக்கம்
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மாநில செயலாளர்களான ஃபெப்சி சிவா, நடிகர் பாபு கணேஷ், விருகை கணேஷ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரை அவரவர் பொறுப்புகளில் இருந்து காயத்ரி நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தாராம்.

ஏகப்பட்ட அதிருப்திகள்
இது ஏகப்பட்ட அதிருப்திகளை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என பாஜகவின் பொதுச் செயலாளர் கரு நாகராஜன் மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதனிடையே தன்னை கட்சியிலிருந்து நீக்க திமுகவும் விசிகவும் சதி வேலையில் ஈடுபடுவதாகவும் ஒரு ட்வீட்டை காயத்ரி போட்டிருந்தார்.

கட்சி மாறும் நேரம்
இந்த நிலையில் இன்றைய தினம் காயத்ரி போட்ட ட்வீட்டில் எனக்கு உடம்பு சரியில்லை. என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் ஓய்வு எடுக்க போகிறேன். ஆங்காங்கே பயணம் மேற்கொண்டதால் தண்ணீர் மாறுபாட்டால் தொண்டை வலி என பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த ஒருவர் கட்சி தாவுவதற்கான நேரம் (Time to Shift) என பதிவிட்டிருந்தார்.

காயத்ரி ரகுராம் ட்வீட்
இதற்கு காயத்ரி தனது ட்வீட்டில் கூறுகையில் எனக்கு கட்சி பதவி இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்.. நான் கட்சி தாவ மாட்டேன்.. இன்னும் என் தேசத்திற்காக உழைப்பேன். நான் பாஜக மற்றும் மோடிக்கு வேலை செய்வேன். நான் ஒரு வலிமையான இந்து சனாதன மாமி என தெரிவித்துள்ளார். ஒரு சிலர் காயத்ரியை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள், விரைவில் அப்பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவர் என்கிறார்கள். ஆனால் காயத்ரியோ இல்லை என்கிறார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications