தமிழகத்தில் பூஜ்ஜியம் வாங்கும் பாஜக? காயத்ரி ரகுராம் நடத்திய பரபரப்பு சர்வே! ரிஸ்க் எடுத்தது வீணோ?
சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் பரபரப்பு சர்வே நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் 40 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தை பொருத்தமட்டில் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாஜக 19 இடங்களிலும் பாமக 10 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும், தமாகா - 3 இடங்களிலும் மற்ற கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்பதில் உறுதியாக உள்ளனர். அதிலும் பாஜகவில் தமிழகத்தில் களத்தில் இறங்கியுள்ளவர்கள் முக்கியமான நிர்வாகிகளாக உள்ளனர். அவர்கள் ரிஸ்க் எடுத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
அதாவது தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னையில் போட்டியிடுகிறார். அவர் தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்தவர். அந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுகிறார். அது போல் எல் முருகனும் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அது போல் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவாக உள்ளார். எனினும் அவர் நெல்லை எம்பி தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை தற்போது, கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இப்படி ரிஸ்க் எடுத்து இவர்களை பாஜக தேசிய தலைமை களத்தில் இறக்கியுள்ளது.
தமிழகத்தில் 19 தொகுதிகளிலும் பாஜக வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தீவிர பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மண்ணை அள்ளி போடுவது போல் அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவில் பாஜகவுக்கு முட்டைதான் கிடைக்கும் என்கிறார். அதாவது ஆந்திரா, கேரளா, தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் உத்தரபிரதேசத்தில் 65 இடங்களிலும் மத்திய பிரதேசத்தில் 24 இடங்களிலும் குஜராத்தில் 23 இடங்களிலும் வெல்லும் என குறிப்பிட்டுள்ள காயத்ரி, மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒற்றை இலக்கங்களில் பாஜக வெல்லும் என தெரிவித்துள்ளார். அதிலும் திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
வடமாநிலமான மணிப்பூரில் பூஜ்ஜியம் பெறும் என்று கணித்துள்ளார். மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆயினும் அங்கு இருக்கும் இரு லோக்சபா தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்லாது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த வன்முறை, பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்கள் நடந்த நிலையில் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு சென்று கூட பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தலில் எதிரொலிப்பதாக சொல்லப்படுகிறது.
மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 214 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெல்லுமாம். பிரதமர் மோடி சொன்னது போல் 400க்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது போல் அவர் குறிப்பிட்டுள்ளார். 543 இல் மேஜிக் நம்பரை பெற, ஒரு கட்சிக்கு 272 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பாஜகவோ வெறும் 214 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை சந்திக்கும் என காயத்ரி குறிப்பிட்டுள்ளார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications