தமிழக பாஜகவிற்குள் கோஷ்டி பூசல்? அம்பலப்படுத்திய காயத்ரி ரகுராம்
Recommended Video

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளது அக்காட்சியை நிர்வாகி மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள தகவல் உறுதியாகியுள்ளது.
சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அருகே போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது, காயத்ரி ரகுராம் மது குடித்து வாகனம் ஓட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த விவகாரத்தை மறுத்துள்ளார் காயத்திரி ரகுராம்.

வீடியோ வெளியீடு
ட்விட்டரில் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: என்ன நடந்தது என்பது எனக்கும் எனது தாயாருக்கும் எனது கூட இருந்தவர்களுக்கும் தெரியும். போலீஸ் என்னை வாகனத்திலிருந்து இறங்கி வீட்டுக்கு செல்லுமாறு சொல்லவும் இல்லை. அப்படி குடி போதையில் நான் வரவும் இல்லை.

முதுகில் குத்தக்கூடாது
பாஜகவில் இருப்பதாலும் நான் குறி வைக்கப்படுகிறேன். பாஜகவிற்கு உள்ளேயும் கூட எனக்கு போட்டி உள்ளது. நான் ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இது சரியான வழி கிடையாது. முதுகில் குத்த கூடாது அவர்கள். இதைத்தான் நான் சொல்ல முடியும். இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

உட்கட்சி பூசல்
காயத்ரி ரகுராம் கூறியுள்ள இந்த தகவல் பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. தனது வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு தனது கட்சியினர் தான் இந்த செய்தியை பரவவிட்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் அவர்.

போலீசில் புகார்
பிக் பாஸ் முதலாவது சீசனில் பங்கேற்றபோது சேரி குறித்து ஒரு வார்த்தையை பயன்படுத்திய காயத்ரி ரகுராம் மீது காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

கலாச்சார பாதுகாவல்
இப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக காயத்ரி ரகுராம் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது அக்கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியில் முக்கியமான பெண் நிர்வாகி மது குடித்து வாகனம் ஓட்டியதால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பகிரங்க குற்றச்சாட்டு
இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் என்றால், பாஜகவினர் மீது பகிரங்கமாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் குற்றம்சாட்டி உள்ளதால் அவர் மீதான கோபம் கட்சியின் தலைமைக்கு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்த மாதிரி நடவடிக்கையை பாஜக தலைமை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நடிகை காயத்ரி ரகுராம் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications