சீமானை கண்டித்து டிவீட் போட்ட காயத்ரி ரகுராம்.. கொந்தளித்த நெட்டிசன்கள்
சீமானுக்கு கண்டனம் தெரிவித்து காயத்ரி ரகுராம் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: சீமானுக்கு கண்டனம் தெரிவிப்பதாக நினைத்து கொண்டு ட்வீட் பதிவிட்ட காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
பாகிஸ்தான் மீது போர் தொடுக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதால் அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக பதிவிட்டுள்ளதற்கு பரபரப்பான விவாதத்தை கிளப்பி வருகிறது.
புல்வாமா தாக்குதலில் 49 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் காரணம் என்றும், அந்நாட்டின் மீது உரிய நடவடிக்கையை உடனே எடுத்தாக வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கண்டனமும் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

கோழைத்தனம்
இந்த நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முன்பு ஒருமுறை பேட்டி அளித்திருந்தார். அதில், 'பாகிஸ்தான் ஒரு அப்பாவி நாடு. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது கோழைதனம்' என்று சொல்லி இருந்தார். அந்த பேச்சினை இந்த சமயத்தில் இந்துத்துவ அமைப்பினர் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
|
குடியுரிமை
சீமானின் இந்த வீடியோவிற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "சீமான் மக்களுக்கு என்ன செய்தார்? தமிழ் மக்களை காப்பாற்றினாரா? எந்தவொரு நன்மையையும் செய்தாரா? ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா? இந்தியாவை விட்டு சீமான் வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வேண்டும். சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்
காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக சில கமெண்டுகள் பதிவானாலும், கடுமையாக விமர்சித்தே பல கமெண்ட்கள் குவிகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் காயத்ரி ரகுராம் குறித்து கடுமையாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

சம்பந்தம் இல்லை
எப்போதோ பேசிய வீடியோவை இப்போது இணைத்து பேசுவதா என்றும் இந்த தாக்குதலுக்கு வேறு ஒரு அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தானுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கமளித்து காயத்ரி ரகுராமை வெளுக்க தொடங்கி உள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலளிக்க முடியாமல் காயத்ரி குமுறிக் கொண்டிருக்கிறார்.

உறுப்பினர் இல்லை
பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து கொண்டு காயத்ரி ரகுராம் சீமானுக்கு எதிராக இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் எனினும், பாஜகவிற்கும் காயத்ரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உறுப்பினராக கூட இல்லாத அவரை எப்போதோ பாஜகவில் இருந்து நீக்கிவிட்டோம் என்று தமிழிசை சவுந்தராஜன் சில மாதங்களுக்கு முன்பு சொன்னது நினைவிருக்கலாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications