ஆங்கிலம் என் தாய் மொழி இல்லனு சொன்ன பாஜக காயத்ரி.. இனி ட்வீட்டை இந்தியிலேயே போடுங்க.. நெட்டிசன்கள்
சென்னை: ஆங்கிலம் எனது தேசிய மொழியோ அல்லது தாய் மொழியோ இல்லை. இந்திதான் தேசிய மொழி என சொன்ன பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
Recommended Video
இந்தி திணிப்பு என்பது கடந்த 8 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை தென்னிந்திய அரசியல்வாதிகள் கடுமையாக கண்டிக்கிறார்கள்.
மேலும் பள்ளிகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்தியும் ஒரு மொழிதானே அதை கூடுதலாக கற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை என்ற பாஜகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசியல்வாதிகள்
ஆனால் மாநில அரசும் அரசியல்வாதிகளும் தாய்மொழியுடன் பிற மாநிலத்தவர்களுடன் பேசுவதற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும் என்கிறார்கள். இந்த நிலையில்தான் நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37 ஆவது கூட்டத்தில் பேசிய அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி மொழி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கனிமொழி கண்டனம்
அமித்ஷாவின் பேச்சுக்கு கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தியாகத்தை மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் அறிய வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

பாஜக காயத்ரி ட்வீட்
இந்த நிலையில் பாஜக நிர்வாகி காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஆங்கிலம் என்பது எனது தேசிய மொழியும் அல்ல, தாய் மொழியும் அல்ல. இந்தி என்பது இந்திய மொழி, நாட்டின் பொதுவான மொழியாகும். வடமாநிலங்களில் இந்தி பரவலாக பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் கூட ஹைதராபாத், திருவனந்தபுரம், உடுப்பி, சவுகார்பேட்டையில் திராவிடர்கள் இந்தி பேசுகிறார்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் பதிலடி
இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
இந்தியும் உங்கள் தாய் மொழி இல்லையே என்கிறார் இந்த வலைஞர்

இனி இந்தியில் பதிவிடுங்கள்
இதை சொல்வதற்கு ஆங்கிலம் உங்களுக்கு தேவைப்படுகிறது.இனி வரும் பதிவுகளை தயவுசெய்து இந்தி (அ) சமஸ்கிருதத்தில் மட்டும் பதிவிடவும் என இந்த வலைஞர் காயத்ரி ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார்.

தாய்மொழி
தாய்மொழி இன்று உங்கள் கீச்சுகளை தமிழில் போடுங்கள் மேலும் ஆங்கில handle பெயரை தாய்மொழியில் எழுதுங்கள். சொற்களில் ஆங்கில வார்த்தைகளை சேர்க்காமல் இருங்கள். வாழ்த்துக்கள் முயற்சி வெற்றியடைய.. என்கிறார் இந்த வலைஞர்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications