திமுகவில் இருந்து தூது வந்ததாரடி....மகனா... மருமகனா? - கமலைக் கேட்கும் பாஜகவின் காயத்ரி ரகுராம்
கமலஹாசன் அவர்களே உங்களிடம் தூது வந்தது யார்? மகனா !மருமகனா! என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம். நான் கேட்பேன் என்று சொன்ன கமலையே கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.
சென்னை: திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. வெறும் தூதுவரை அனுப்பினால் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கட்சி தலைமை என்னிடம் பேசட்டும் என சொல்லும் கமலஹாசன் அவர்களே.. உங்களிடம் தூது வந்தது யார்? மகனா? மருமகனா என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை தாம்பரத்தில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், திமுகவிடம் இருந்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார். தலைமையிடம் இருந்து தகவல் வரவில்லை. தூது வந்தது என்று மட்டும் குறிப்பிட்டார்.
கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்க திமுக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை பகிரங்கமாகவே தெரிவித்தார் கமல்ஹாசன். முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தியுள்ள நிலையில் அவர் திமுக கூட்டணியில் எப்படி இணைவார் என்ற கேள்வியும் எழுந்தது.

தூது வந்தது யார்
இந்த நிலையில் திமுகவில் இருந்து தூது வந்தது யார் என்று கேட்டுள்ளார் பாஜகவின் காயத்ரி ரகுராம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த காயத்ரி, பாஜகவில் இணைந்த பிறகு கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகளை கிண்டலடித்து பல ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார்.

சொல்லுங்க சொல்லுங்க
திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. வெறும் தூதுவரை அனுப்பினால் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
கட்சி தலைமை என்னிடம் பேசட்டும் என சொல்லும் கமலஹாசன் அவர்களே உங்களிடம் தூது வந்தது யார்? மகனா !மருமகனா!
என்று கேட்டுள்ளார் காயத்ரி. நான் கேட்பேன் என்று சொல்லும் கமலை கேட்டுள்ளார் காயத்ரி.

எப்படி பேசுவீர்கள்
ஊழலை ஒழிப்பேன் ! என சொல்லும் நீங்கள் ஊழலின் மொத்த உருவமான திமுகவோடுஎப்படி கூட்டணி பேசுவீர்கள்,பேரம் படிந்தால் ஊழல் குறித்தெல்லாம் கவலையில்லை அப்படித்தானே என்றும் கேட்டுள்ளார் காயத்ரி.

திமுக கூட்டணியில் இணைவாரா?
சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வராக வேண்டும் என்பது மு.க ஸ்டாலின் நீண்ட நாள் கனவு. அதற்காக மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து வருகிறார். திமுக 200 என்ற இலக்கோடு காய் நகர்த்தி வரும் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தை கூட்டணிக்கு அழைப்பாரா? ஒருவேளை ஸ்டாலின் நேரடியாக அழைத்தால் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைவாரா? மறுத்து விடுவாரா? தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications