ஜெம் வீரமணி மகள் கைது? விமானத்தில் வைத்து தூக்கிய SIT.. சிங்கப்பூர் புறப்பட்டபோது சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வரும் நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக இன்று சென்னையில் இருந்து விமானத்தில் வெளிநாடு செல்ல முயன்ற அவரது மகள் அர்ச்சனா வீரமணியை சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக பிடித்தனர். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Gem Granites Veeramani

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணியின் பாலியல் வழக்குகள் தமிழகத்தையே உலுக்கி உள்ளன. இவர் ஏராளமான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 2024 நவம்பர் மாதம் முதல் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 82. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டுள்ளன.

தற்போது வரை மொத்தம் 7 போக்சோ வழக்குகள், 2004ல் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு என்று மொத்தம் 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கில் ஜெம் வீரமணி மட்டுமின்றி அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் இன்னும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தோண்ட தோண்ட பல்வேறு திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வழக்கை மூடி மறைக்க பெரிய அளவில் பணம், நகைகள் லஞ்சமாக கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு விசாரணை எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை இன்று போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அர்ச்சனா வீரமணி இன்று சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது திடீர் என்ட்ரி கொடுத்த சிறப்பு விசாரணை குழுவினர் அவரை விமானத்தில் இருந்து இறக்கினர்.

தந்தை ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரை சக பயணிகள் உதவியுடன் விமானத்தில் இருந்து இறக்கி வந்தனர். தற்போது அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணை முடிவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் அவருடன் நெருக்கமாக இருந்த நபர்களின் நடமாட்டத்தை எஸ்ஐடி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூடுதல் எஸ்பி தலைமையிலான தனி டீம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று சிங்கப்பூர் பறக்க முயன்ற ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை போலீசார் விமான நிலையத்தில் பிடித்துள்ளனர்.

இவரை போலீசார் வெளிநாடு விடாமல் தடுத்து நிறுத்தி விசாரிக்க அழைத்து சென்றதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஜெம் வீரமணி மீது முதல் பாலியல் புகார் கடந்த 2024 நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமி விவகாரத்தில் ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனத்தில் இருந்து மற்றவர்களுக்கு தங்கநகைகள், பணம் கைமாற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி அர்ச்சனா வீரமணியிடம் விசாரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி போலீஸ் அதிகாரி சார்பில், ''வீரமணி இந்த ஆண்டு தொடக்கத்தில் நிலங்களை விற்பனை செய்தார். அந்த பணத்தின் ஒரு பகுதி அர்ச்சனாவிடம் சென்றது. இதனால் ஜெம் வீரமணி யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என்ற விவரம் அர்ச்சனாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+