சிறுமிகளுக்கு வன்கொடுமை.. ஜெம் வீரமணி வழக்கில் நவ.20-இல் குற்றச்சாட்டு பதிவு.. போக்சோ கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் வரும் 20 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என போக்சோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெம் வீரமணி, கார் டிரைவர்கள் பாபு, பார்த்திபனிடம் முதல் வழக்கிற்கான குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவரது கார் டிரைவர்கள் பாபு மற்றும் பார்த்திபன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அடிப்படையில் இவர்கள் 3 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Gem Veeramani case

ஜெம் வீரமணிக்கு எதிராக மட்டும் தற்போது வரை மட்டும் 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முதலில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு, சுமார் 720 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையினை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக் கொண்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்குவதற்காக, வீரமணி உள்ளிட்டோரை இன்று ஆஜர்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இன்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் பத்மா முன்பு ஜெம் வீரமணி மற்றும் பாபு, பார்த்திபன் ஆகிய 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததொடு, அன்றைய தினம் வழக்கின்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+