ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு! மகள் அர்ச்சனா எஸ்ஐடி முன்பு ஆஜராவாரா? அடுத்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் இருக்கும் அவர் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெம் வீரமணிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த வழக்கில் ஜெம் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், பழைய உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Gem Veeramani case

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வீரமணியின் மகள் அர்ச்சனா விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (அக்.23) பகல் 2.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்தார்.

அப்போது அவர் விமானத்தில் ஏறிவிட்டார். இந்த நிலையில் அங்கு வந்த சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார், சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் இருந்த அர்ச்சனாவை இறக்கிவிடும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்ற விமான நிலைய அதிகாரிகள் அர்ச்சனாவை விமானத்தில் இறக்கினர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு புலனாய்வு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

நேற்று முன் தினம் மதியம் முதல் இரவு வரை அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா தரப்பு வழக்கறிஞர்கள், "அர்ச்சனாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்வதாக எஸ்ஐடிக்கு கடிதம் எழுதி அனுப்பிய பிறகுதான் அர்ச்சனா புறப்பட்டார். ஆனால் போலீஸார் எந்த காரணமும் சொல்லாமல் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அர்ச்சனா இன்று மீண்டும் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் அர்ச்சனா, ஆஜராவாரா இல்லையா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+