சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஜெம் வீரமணிக்கு உதவியதாக மேலாளர் சக்திவேல் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில் ஜெம் வீரமணி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவியதாக மேலாளர் சக்திவேலை போலீசார் கைது செய்துள்ளனர். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஜெம் வீரமணிக்கு சக்திவேல் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட உதவிகளைச் செய்ததாககவும், வீரமணியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இவர் மீது 7 வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Gem Veeramani Manager Sakthivel Arrested for Allegedly Helping Him Evade Police in Harassment Case

தொழில்அதிபர் 'ஜெம்' கிரானைட் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீரமணி மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இவருடன், சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன், சிறுமிகளை அழைத்து வந்த டிரைவர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 200 கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், தகவல் வெளியானது.

இதற்கிடையே ஜெம் வீரமணி மீது மேலும் சில சிறுமிகள் புகார் அளித்தனர். இதனால் மொத்தம் ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு சிறுமி ஜெம் வீரமணி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 7வது வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புகாரின் பேரில், ஜெம் வீரமணிக்கு சொந்தமான சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது வீடு, கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு, சாமுண்டீஸ்வரி நேச்சுரல் கிரானைட் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 'ஜெம்' கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் அவரை இன்று கைது செய்தனர். விசாரணையில், வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க சக்திவேல் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட உதவிகளைச் செய்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+