ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்.. உதவியாளர் கணேசனையும் தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகள், தாய் தந்தை இழந்த சிறுமிகளின் கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி தொழில் அதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜெம் வீரமணியின் உதவியாளராக செயல்பட்டு வந்த கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும், அந்த பென்டிரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையில் கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

gem-veeramani-sexual-abuse-case-another-aide-arrested-in-chennai-probe-intensifies

பாலியல் கொடுமை

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், அந்த வீடியோவில் இருந்தவர் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவர்களை குடிவைத்துள்ளார்.

சாந்தி மற்றும் மகேந்திரசிம்கன் தம்பதி மூலம் சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொழிலதிபர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த சிறுமிகளை அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திரா சிம்கன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சில புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஒருவர் கைது

இதையடுத்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜெம் வீரமணியின் உதவியாளரான கணேசர் என்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+