மமகவுக்கு சீட் தருமா திமுக? இன்று சென்னையில் பொதுக்குழு கூட்டம்! மக்களவைத் தேர்தல் பற்றி ஆலோசனை
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமைப் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. இது வரை திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 தொகுதிகளை வென்றது.

2019 மக்களவைத் தேர்தலில் மமக திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்தாலும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த வரும் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது . இந்த நிலையில் இன்று இது தொடர்பாக பொதுக்குழுவை கூட்டி மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்கள். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், "மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமைப் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 7 ஆம் தேதி கூடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு, மமக வின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் இப்பொதுக் குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பது? 2019 ஆம் ஆண்டை போன்று இம்முறையும் திமுக மக்களவைத் தொகுதிகளை ஒதுக்காவிட்டால் என்ன செய்வது? என்பது போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்கள்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications