பூமியை பசுமையாக வைத்திருக்க சூரிய மேற்கூரையை பயன்படுத்துங்க! மானியம் பெறுவது எப்படி?
சென்னை: உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமரின் சூரிய வீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டான்ஜெட்கோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்! 🌞💡

1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூரிய மேற்கூரைகளை அமைக்க https://www/pmsuryaghar.gov.in/ https://tnebltd.gov.in/usrp/applynatapp.xhtml ஆகிய இணைதளங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமரின் சூரிய வீடு திட்டத்தில் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
மேலும் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசிடம் மானியம் பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோ வாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்துவதற்கு ரூ 30 ஆயிரம் மானியம் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் சராசரியாக ஒரு குடும்பம் ஒரு ஆண்டுக்கு 15 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துக் கொள்ளலாம். பிரதமர் மோடி புதிய சோலார் திட்டம் பி.எம்.சூர்யா கர் பிஜிலி யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது. ரூ 75 ஆயிரம் கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் மானியத்தில் சூரிய மின் தகடுகள் இந்தியாவில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம். இதற்காக கடன் வசதி, மானியம், நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 7 நாட்களில் இருந்த 30 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும்.
1 கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும். குறுகிய காலத்தில் முதலீடு திரும்ப பெறலாம். இது குறித்து 1800-233-7879 என்ற எண்ணை அழைத்து பதிவு செய்ய வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications