குறுக்கே வந்த #tvkfortn..தவெக மாஸ்! #GetOutStalin Vs #GetOutmodi..எக்ஸில் மல்லுக்கட்டும் பாஜக, திமுக
சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், திமுகவினரும் பாஜகவினரும் சமூக வலைதளங்களில் #GetOutStalin, #GetOutmodi ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறுக்க இந்த கௌசிக் வந்தா என்பது போல #tvkfortn என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்," தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்ற போது கடந்த முறை தமிழக மக்கள் 'கோ பேக் மோடி' என்று சொன்னார்கள். அப்படி துரத்தி அடித்த அவர்கள் மீண்டும் அதே போல தமிழ்நாட்டு மக்களிடம் செய்ய முயன்றால் கோ பேக் மோடி என்பதற்கு பதிலாக 'கெட் அவுட் மோடி' என்று சொல்லி துரத்துவார்கள் என பேசி இருந்தார்.
கெட் அவுட் மோடி என உதயநிதி பேசியதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. உலக நாடுகள் அனைத்தும் பிரதமர் மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் விமர்சிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் கெட் அவுட் மோடி என சொல்லி பாருங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை, சவால் விட்டதோடு துணை முதலமைச்சர் உதயநிதியை ஒருமையிலும் பேசினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் வீடும் அறிவாலயமும் முற்றுகையிடப்படும் எனவும் பேசினார்.

அதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் வீட்டில் தான் இருப்பேன் முடிந்தால் வந்து முற்றுகையிடுங்கள் என பேசினார். அதற்கு மீண்டும் பதில் அளித்த அண்ணாமலை, நாளை காலை 'கெட் அவுட் ஸ்டாலின்' என பதிவிட போகிறேன் என கூறி இருந்தார். முன்னதாக திமுகவினரும் கூட இந்தியா கூட்டணி கட்சிகளும் கெட் அவுட் மோடி ( #GetOutmodi ) என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் ( #GetOutStalin ) என பதிவிட்டார். இதை அடுத்து பாஜகவினர் அந்த ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். தொடர்ந்து 10 லட்சம் ட்விட்டர் பதிவுகள் இந்த ஹேஷ்டேக் மூலம் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மக்களுக்கு சேவையாற்றுவதை விட்டுவிட்டு ஹாஷ்டேக் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினரும் பாஜகவினரும் என தமிழக வெற்றி கழகத்தினர் விமர்சித்தனர். இடையே டிவிகே ஃபார் டிஎன் ( #tvkfortn ) என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் பரவியது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த நிலையில் சுமார் 4 லட்சம் ட்வீட்டுகள் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி போடப்பட்டது.
திமுகவும் பாஜகவும் சமூக வலைதள சண்டை போட்டு வரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ அமைதி காக்கிறது. ஆனால் தமிழக வெற்றி கழகமோ அதற்கும் பதிலடி கொடுத்து இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்











Click it and Unblock the Notifications