கஜினி பட வில்லன்.. பிரபல நடிகர் பிரதீப் ராவத் புற்று நோயால் மரணம்.. ரசிகர்கள் சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு, சூர்யா, அஜித் குமார் படங்களில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் பிரதீப் ராவத் புற்று நோய் பாதிப்பால் காலமானார். தமிழில் கஜினி, வீரம், தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார். அவருக்கு வயது 74. ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரதீப் சிங் ராவத், அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிங் ராவத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

Pradeep Rawat

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடித்து மெகா ஹிட் அடித்த கஜினி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இதேபோன்று அஜித் குமாரின் வீரம் படத்திலும் பிரதீப் ராவத் நடித்து இருந்தார். சிம்புவின் தொட்டி ஜெயா படத்திலும் நடித்து இருந்தார். அவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த அமீர் கானின் லகன் படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் பிரதீப் ராவத் நடித்து இருந்தார்.

சீனா டவுன் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். மகாபாரதா தொடரில் அஸ்வத்தமா கேரக்டரிலும் இவர் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ரசிக்கப்பட்ட நடிகாராக விளங்கிய பிரதீப் ராவத் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல்தெரிவித்து வருகிறார்கள்.

ராவத்தின் பிசினஸ் மேனேஜர் சித்தார்த் திவாரி கூறுகையில், "ரத்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராவத் குணம் அடைந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து மும்பையில் உள்ள பிவண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+