செஞ்சி ராமச்சந்திரனை தூக்கிய விஜய்? கட்சியில் சேரும் அதிமுக பெரும்புள்ளி! தாவல் லிஸ்ட் பெருசா போகுது
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அரசியல் பிரபலங்கள் பலரையும் மேடையேற்ற விரும்புகிறார் விஜய். இதற்காக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையால் புறக்கணிக்கப்பட்டு அதே சமயம் கடந்த காலங்களில் முக்கிய அரசியல் தலைவர்களாக இருந்த நபர்களை குறி வைத்து களத்தில் குதித்துள்ளனர் விஜய் கட்சியின் முக்கியஸ்தர்கள்.
அந்த வகையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை அணுகியுள்ளனர். அதிமுகவில் தன்னை கட்சித் தலைமை கண்டு கொள்ளாமல் இருப்பதால், அவரும் விஜய் கட்சிக்கு தாவி விடலாமா ? என்று தனது நலன் விரும்பிகளிடம் விவாதித்திருக்கிறார்.

அதற்கு பாசிட்டிவ்வான பதிலே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விஜய் கட்சிக்கு தாவுவதற்கு தயாராகி வருகிறார் முன்னாள் அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரன். த.வெ.க.வுக்கு அவர் வரும் பட்சத்தில் அவருக்கு அவைத் தலைவர் பதவி தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விஜய் கட்சியின் நிர்வாகிகள்.
விஜயின் தவெக கட்சி மாநாடு:
த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.
போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதே சமயம் கொடிக்கான விளக்கத்தை மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறி உள்ளார்.
மாநாடு நடக்க உள்ளது: இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது.
நடிகர் விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். ஏ என்ற இனிஷியல் கொண்ட நபரும்.. இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் விஜயின் தமிழக வெற்றிகழக கட்சியில் இணைய உள்ளார்களாம்.
தவெகவின் மாநாட்டில் கட்சியின் கொடி ஏற்றிய பின் மேற்கொள்ளப்பட்ட அதே உறுதிமொழி மேற்கொள்ளப்பட உள்ளது. விஜய் கொடி ஏற்றியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுதி மொழியை படிக்க உள்ளனர்.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications