CM சார் நீங்க தான் கெத்து.. TVKலாம் வெத்து! மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய சிறுமி!
திண்டுக்கல்: நான்கு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று காலை கொடைக்கானலில் இருந்து சென்னை கிளம்பினார். முதல்வர் ஸ்டாலின். கொடைக்கானலில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். மு.க.ஸ்டாலின் கொடைக்கானலிலிருந்து சென்ற போது," CM சார் நீங்க தான் கெத்து TVK லாம் வெத்து சார்" என ஒரு சிறுமி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 மிகுந்த பரபரப்பும் அரசியல் விறுவிறுப்பும் மத்தியில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் தொடர்ந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரசாரம் செய்தார். வெயிலின் கடும் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் தினமும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின்
இந்நிலையில், கடந்த பல வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக மலைநகரமான கொடைக்கானல் சென்றார். கடந்த சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் நட்சத்திர விடுதிக்கு நான்கு நாள் பயணமாக வந்தார்.
பொதுமக்கள் வரவேற்பு
தொடர்ந்து மூன்று நாட்களாக காலை வேளையில் ஏரி சாலை மற்றும் மனோரஞ்சிதம் நீர்த்தேக்கம் பகுதிகளில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது சாலை ஓரங்களில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முதல்வரை கண்டதும் பூங்கொத்து , புத்தகம், சால்வை ஆகிய பரிசு பொருட்களை கொடுத்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து வந்தனர். மேலும் நேற்று ஏரிசாலை அருகே உள்ள பழைய பொருட்களின் அருங்காட்சியகத்தில் சென்று பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டார்.
துர்கா ஸ்டாலின்
மேலும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இங்கு இருக்க கூடிய பிரபலமான குறிஞ்சி ஆண்டவர் கோவில், மாரியம்மன் கோவில், குழந்தை வேலப்பர் கோவில், சலேத் மாதா சர்ச் ஆகிய இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் அவரது குடும்பத்தினர்கள் ஏரி சாலையை சுற்றி குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
அமைச்சர்கள் சந்திப்பு
அதனை தொடர்ந்து நேற்று மாலைவேளையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொள்வதற்காக ஐ பெரியசாமி , சக்கரபாணி ஆகிய அமைச்சர்களும் ip செந்தில் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நான்கு நாள் ஓய்வுக்கு பிறகு முதல்வர் இன்று கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாலை மார்க்கமாக சென்று அங்கிருந்து தனி விமான மூலம் சென்னைக்கு சென்றார்.
சிறுமி வீடியோ
மேலும் கொடைக்கானலில் இருந்து செல்லும் வழியில் சாலை ஓரங்களில் நின்று இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கண்டதும் வாகனத்தை விட்டு இறங்கி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தும் நன்றி தெரிவித்தும் அங்கிருந்து சென்றார். குறிப்பாக முதல்வர் கொடைக்கானலுக்கு வரும் பொழுது பண்ணைக்காடு மலைச்சாலை அருகே பெண் சுற்றுலா பயணி ஒருவர் தவெக கதை முடிந்து விட்டது எனக் கூறியதும் முதல்வர் அதற்கு ரியாக்ஷன் செய்த வீடியோ பெரும் வைரலானது. இந்த நிலையில் இன்று அவர் சென்னைக்கு கிளம்பும் போது கொடைக்கானலில் தங்கும் விடுதி அருகே ஒரு சிறுமி," நீங்கதான் கெத்து.. தவெக வெத்து" என்று கூறிய வார்த்தையும் தற்போது வைரலாகி வருகிறது.














Click it and Unblock the Notifications