மாஸ்டர் பிளானில் ஜி.ஐ.எஸ் கட்டாயம்.. 125 முழுமை திட்டங்களில் பெரிய ட்விஸ்ட்.. அரசு அரசாணை

Subscribe to Oneindia Tamil

சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு வெளியிலுள்ள பகுதிகளில், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை (DTCP) மூலம் தயாரிக்கப்படும் புதிய மாஸ்டர் பிளான் எனப்படும் முழுமைத் திட்டங்கள் அனைத்திலும் ஜி.ஐ.எஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வசதி இருப்பது தமிழக அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த மாற்றம் தெரியுமா? அரசின் ஒட்டுமொத்த நகரமைப்பு பணிகளையும் மிகவும் துல்லியமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்ற வழிவகை செய்கிறதாம்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு வெளியே உள்ள பகுதிகள் டி.டி.சி.பி எனப்படும் நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

GIS Master Plan Comprehensive Development Plans Tamil Nadu Government

மாஸ்டர் பிளான் புதிய அதிரடி

இந்த பகுதிகளுக்கான மாஸ்டர் பிளான் எனப்படும் முழுமைத் திட்டங்களை அந்த துறைதான் தயாரித்து வருகிறது. அதுவும் இல்லாமல் பழைய முறையில் தயாரிக்கப்பட்ட திட்டங்களை ஒன்றிணைத்து ஒட்டுமொத்தமாக பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால்தான், அரசு இப்போது ஜி.ஐ.எஸ் டெக்னாலஜியை கட்டாயமாக்கியுள்ளது.

ஜி.ஐ.எஸ் வசதியுடன் இவை தயாரிக்கப்பட்டால் சிறு நகரங்களின் திட்டங்களையும் சேர்த்து எளிதாக பயன்படுத்த முடியும். இப்போதைய நிலவரப்படி கோவை, மதுரை, திருச்சி, ஓசூர், தூத்துக்குடி மற்றும் ராஜபாளையம் ஆகிய நகரங்களின் ஜி.ஐ.எஸ் வசதியுடன் கூடிய முழுமை திட்டங்களுக்கு மட்டுமே அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வரும் 125 முழுமை திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அனைத்து திட்டங்களிலும் இந்த வசதி கட்டாயமாக்கப்படுகிறது. இதைத்தவிர வட்டார, நில வகைப்பாடு வரைபடங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகள், கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளக் கூடாத இடங்கள் குறித்த வரைபடங்கள் தயாரிப்பதும் இந்த முறையின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்த அரசாணை விவரம் இதுதான்: "தமிழகத்தில் தற்போது, 130 நகரங்களை உள்ளடக்கிய நிலையில், 125 முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை பல்வேறு அமைப்புகளால் தயாரிக்கப்படுகின்றன.

ஜி.ஐ.எஸ். வசதி கட்டாயம்

இந்த முழுமை திட்டங்கள் பழைய நடைமுறைப்படி இருப்பதால், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இவை உட்பட, எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் அனைத்து முழுமை திட்டங்களிலும், ஜி.ஐ.எஸ் வசதி இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

முழுமை திட்டங்கள் மட்டுமல்லாது, வட்டார, நில வகைப்பாடு வரைபடங்களும் ஜி.ஐ.எஸ் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, முழுமை திட்டங்கள் தயாரிக்கும்போது, அபாயகரமான பகுதிகள், கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள கூடாத இடங்கள் குறித்த வரைபடங்கள் தயாரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பில் அதிரடி

அரசின் இந்த அதிரடியால் நடக்க போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா? புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பில் ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படுவதால், தனித்தனியாகக் கிடக்கும் சிறு நகரங்களின் திட்டங்களை எளிதாக ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சியைத் திட்டமிட முடியும்.

பழைய முறையில் இருந்த குழப்பங்கள் மற்றும் ஒருங்கிணைப்புத் தடைகள் நீங்கி, நில வகைப்பாடுகள் மற்றும் அபாயகரமான பகுதிகள் குறித்த துல்லியமான விவரங்கள் ஒரே கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படுவதால், எதிர்கால நகர்ப்புற மேலாண்மை மற்றும் பேரிடர் தடுப்புப் பணிகள் மிகவும் எளிமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாறும் என்று நம்பப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+