ஒரு வாய்ப்பு தாருங்கள்.. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்... அன்புமணி ராமதாஸ்
சென்னை: தமிழகத்தின் நிலையை தலைகீழாக மாற்றவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் பா.ம.க சார்பில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முத்துவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும், தன் கால் படாது என சபதம் எடுத்ததோடு, சொன்ன சொல் தவறாமல் இதுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் ராமதாஸ் என்றார்.
நாட்டிலேயே மூன்று இட ஒதுக்கீட்டையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையையும் பெற்றுத் தந்த ஒரே தலைவர் ராமதாஸ் மட்டுமே என்றும் அன்புமணி தெரிவித்தார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்த பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக பிரதமர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டு இருந்த அன்புமணி, மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேல் தனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையான ( ராமதாஸ்) அவரை பெருமையாக பார்க்கிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications