Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்குங்க..எல்லாத்துக்கும் இவரே காரணம்! ஜிகே மணிக்கு எதிராக பாமக பாட்டாளிகள்! திமுகவில் ஐக்கியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் ராமதாஸ் அன்புமணி ராமதாஸுக்கு இடையேயான பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஜிகே மணி தான் என கூறப்பட்ட நிலையில், நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினையும் திமுகவையும் பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணி புகழ்ந்து பேசி இருப்பது கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியை விட்டு அவரை நீக்க வேண்டும் என பாமக பாட்டாளிகள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில், அவர் திமுகவில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் சங்கத்தை துவக்கி அதனை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி தேர்தல் அரசியலில் இறங்கினார் ராமதாஸ். தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய காலகட்டங்களில் பாமகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றம், இட ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் அறிவியல் என பல தளங்களிலும் பாமக செயல்பட்டு வந்தது. அக்கட்சியின் சார்பில் பலர் எம்பிக்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருந்திருக்கின்றனர்.

GK Mani DMK PMK

இந்த நிலையில் கட்சியில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவராக இருந்த ஜிகே மணி கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து அன்புமணி ராமதாஸுக்கும், அவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது மகன் ஜிகேஎம் தமிழ்குமரனை இளைஞர் அணி தலைவர் ஆக்கினார் ஜிகே மணி. சிறிது நாட்களில் அவர் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் கொடுத்த நெருக்கடியே ஜிகேஎம் தமிழ்குமரன் தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம் என என்ன நினைத்தார் ஜிகே மணி. தொடர்ந்து தனது பதவியும் தனது மகனின் பதவியும் பறிபோக அன்புமணியே காரணம் என கோபத்தில் இருப்பதாக சொல்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் தான் பாமகவின் தலைவர் அன்புமணி செயல் தலைவர் என அதிரடியாக பேட்டி கொடுத்தார் ராமதாஸ். தொடர்ந்து நானே கட்சியின் தலைவர் பொது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் தான் என அன்புமணி பதில் கொடுத்து இருந்தார்.

தற்போதைக்கு அந்த விவகாரம் அமைதியாக இருந்தாலும் வன்னியர் சங்க மாநாட்டு பணிகளில் பாமகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அன்புமணி ராமதாஸுக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனையை மூட்டிவிட்டது ஜிகே மணி தான் என்கின்றனர். மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைய கூடாது என திமுக நினைப்பதாகவும், அதற்கு ஜிகே மணியை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நேற்று முன்தினம் ஒன் இந்தியா தமிழில் விரிவாக செய்து வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜிகே மணி திமுகவுடன் ரகசிய தொடர்பில் இருப்பது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் நேற்று சட்டசபையில் ஜிகே மணியின் பேச்சு இருந்தது. திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் வெகுவாக புகழ்ந்ததோடு கட்சியின் முன்னாள் தலைவரான கருணாநிதிக்கு முத்தமிழ் அறிஞர் என பெயர் வைத்ததே நான் தான், அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்ற தீர்ப்பால் அது பறிபோனது. திமுக உரிய வாதங்களை முன்வைக்கவில்லை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியினர் திமுகவுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் போது ஜிகே மணி கலைஞர் புகழ் பாடியதை அவர்கள் ரசிக்கவில்லை. தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை குரல் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக ஜிகே மணி பாமகவிலிருந்து விலகலாம் எனவும், திமுகவில் அவர் இணையலாம் அல்லது தனி அமைப்பை தொடங்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பாமகவில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் திமுக ஆதரவாளராக இருக்கும் நிலையில், அவரைப் போலவே ஜிகே மணியேயும் பயன்படுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+