ஒரே குழப்பமா இருக்குல்ல.. ஐசியூ-ல இருக்காருன்ன அன்புமணி! வார்டில் சிரிக்கும் ராமதாஸ் போட்டோ ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ஐசியூவில் இருக்கிறார் என்பதால் அவரை 6 மணி நேரம் கழித்துத்தான் பார்க்க முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில் ராமதாஸ் வார்டில் சிரித்தபடியே தனது குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போட்டோவை பாமகவின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அன்புமணி சென்றிருந்தார். இந்த நிலையில் அப்பல்லோவில் இருந்து வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

ramadoss chennai

அப்போது அவர் கூறுகையில், ராமதாஸ் நலமுடன் இருக்கிறார். அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்தேன். ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாகவும் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் எந்த அடைப்பும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

எனினும் இரு நாட்கள் ராமதாஸ் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அன்புமணி தெரிவித்திருந்தார். ஐசியூவில் இருப்பதால் ராமதாஸை 6 மணி நேரம் கழித்துத்தான் சந்திக்க முடியும் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராமதாஸ் சிகிச்சை பெறும் புகைப்படங்களை ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மருத்துவர் அய்யா அவர்கள் உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, ஜி.கே.மணி ஆகியோர் உள்ளனர். அப்போது ராமதாஸ் அவர்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது ராமதாஸ் ஐசியூவில் இருந்து சிகிச்சை பெறுவது போல் தெரியவில்லை. அவர் தனிப்பட்ட வார்டில் இருந்து சிகிச்சை பெறுகிறார். ஆனால் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதாக அன்புமணி, சொன்னது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜி.கே.மணி வெளியிட்ட புகைப்படங்களில் ராமதாஸ் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. எனினும் ராமதாஸ் ஆரோக்கியமாக நலமுடன் இருப்பதை இந்த புகைப்படம் மூலம் பார்த்த தொண்டர்களும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+